For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அருணாசலப் பிரதேசத்தில் 30 கிலோ மீட்டர் தூரம் ஊடுருவிய சீனா!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் சீன ராணுவம் 30 கிலோ மீட்டர் தூரம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. லடாக்கில் சீனா தொடர்ந்தும் ஊடுருவி வருகிறது. இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தின் அஞ்சவ் மாவட்டத்தில் சங்கலஹாம் பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவு இந்தியாவுக்குள் ஊடுருவியிருக்கின்றனர்.

சங்கலஹாம் பகுதிக்கு உரிமை கோரி சீன ராணுவ துருப்புகள் பேனரை ஏந்தியபடி ரோந்து சுற்றி வந்ததாகவும் அவர்களை வெளியேறும்படி இந்திய ராணுவத்தினர் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது வரை அங்கு கூடாரங்கள் அமைத்து சீன ராணுவத்தினர் தங்காத நிலையில் அவர்கள் தங்களது பகுதிக்கு இன்று திரும்பக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
After several recent incursions in Ladakh, China has now flexed its muscles in Arunachal Pradesh, transgressing about 30 km inside Indian territory in Chaglagam sector in Anjaw district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X