For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த இந்தியரின் சம்பளம் ரூ. 105 கோடி தான்!

By Chakra
Google Oneindia Tamil News

Ivan Menezes
லண்டன்: உலகின் முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனமான டியாஜியோவின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ள இந்தியரான இவான் மெனெசெசுக்கு ஆண்டு ஊதியம் ரூ. 105 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவான் கடந்த 13 ஆண்டுகளாக டியாஜியோவில் பணியாற்றி வருகிறார். இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக (COO) இருந்த அவருக்கு கடந்த ஆண்டு ரூ. 75 கோடி ஊதியமாகத் தரப்பட்டது.

இப்போது தலைமை செயல் அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள அவருக்கு 8.6 சதவீத ஊதிய உயர்வும் (ரூ. 9.6 கோடி), மற்ற சலுகைகளாக ரூ. 95 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டியாஜியோ நிறுவனத்தின் தயாரிப்புகள் தான் ஜானி வாக்கர், ஸ்மிர்னாப் போன்ற மதுபான வகைகளாகும். இந்த நிறுவனம் சமீபத்தில் விஜய் மல்லையாவின் யு.பி. மதுபான நிறுவனத்தில் ரூ. 10,000 கோடியை முதலீடு செய்து பங்குகளை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

53 வயதான இவான் மெனெசெஸ் அகமதாபாத் ஐஐஎம்மில் படித்தவர். டியாஜியோவில் பணிக்கு சேரும் முன் நெஸ்ட்லே, வேர்ல்பூல் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

English summary
The world's largest spirits maker Diageo Plc has proposed an annual pay package of up to 10.9 million British pound (about Rs 105 crore) for its newly appointed, Indian-origin, CEO Ivan Menezes. Menezes, who has been with UK-headquartered Diageo for about 13 years, was paid total remuneration of 7.8 million pounds (Rs 75 crore) in the last financial year ended June 30, 2013 when he served as Chief Operating Officer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X