For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்வான் டெலிகாமா? கேள்விப்பட்டதே இல்லையே?: கோர்ட்டில் ஒரேபோடு போட்ட அனில் அம்பானி!!

By Mathi
Google Oneindia Tamil News

Anil Ambani will have to appear in special court today
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரான ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி, ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனம் பற்றி தாம் கேள்விபட்டதே இல்லை என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார்.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களில் ஒன்று ஸ்வான் டெலிகாம். இது ரிலையன்ஸ் குழுமத்தால் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு அலைக்கற்றை உரிமம் பெற தகுதி இல்லாத நிலையிலும் முறைகேடாக உரிமம் பெறப்பட்டது என்பது சிபிஐ புகார். இது தொடர்பாக ரிலையன்ஸ் குழும அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

இந்த வழக்கில் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி ஆகியோரை சிபிஐ தங்கள் தரப்பு சாட்சியமாக சேர்த்துள்ளது. மேலும் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

ஆனால் ரிலையன்ஸ் குழுமத்துக்கும் ஸ்வான் நிறுவனத்துக்கும் எந்த தொடர்புமே இல்லை என்று கூறி நீதிமன்றங்களில் அனில் அம்பானி, டினா அம்பானி முறையீடு செய்து பார்த்தனர். ஆனால் அவர்கள் முறையீட்டுக்குப் பலனில்லை. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் ஆஜராகிறோம் என்று இருவரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் உறுதி அளித்தனர்.

இதனால் இன்று அனில் அம்பானியும் நாளை டினாவும் ஆஜராக கடந்த மாதம் சிபிஐ நீதிமன்றம் புதிய சம்மனை அனுப்பியது. ஆனாலும் அனில் அம்பானி மீண்டும் ஆஜராக விலக்கு கோரி மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை நேற்று சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதைத் தொடர்ந்து இன்று காலை அனில் அம்பானி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது, ஏராளமான போர்டு மீட்டிங்குகளில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். என்னால் அவற்றை நினைவுபடுத்த முடியவில்லை, ஆவணங்களில் உள்ளவைதான் உண்மையானவை என்றார்.

அதற்கு நீதிபதி ஓபி ஷைனி, நீங்கள் பொய்யான ஆவணங்களை பரமாரிக்கவில்லை.. உங்களது ஆவணங்கள் நிச்சயமாக சரியானதுதானா என்றார். அதற்கு பதிலளித்த அனில் அம்பானி, நிச்சயமாக ஆவணங்கள் அனைத்தும் சரியானவையே என்றார். மேலும் போர்டு மீட்டிங்குகளில் எழுதப்படும் குறிப்புகள் என்னால் எழுதப்படுவை அல்ல. என்னுடைய பணியாளர்களால் எழுதப்படுகிறவை என்றும் அனில் அம்பானி சுட்டிக்காட்டினார்.

சிபிஐ தரப்பில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கும் அனில் அம்பானி, நினைவில்லை, தெரியவில்லை என்றே பதிலளித்தார் அனில் அம்பானி. மேலும் 2008 ஆம் ஆண்டு ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்டதை அறிவீர்களா? என்று சிபிஐ தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அனில் அம்பானி, "ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனம் பற்றியே நான் கேள்விபட்டதே இல்லை என்று ஒரே போடுபோட்டுவிட்டார்.

ஆனால் தகவல் தொடர்புத் துறை அமைச்சர்களான பிரமோத் மகாஜன், ஆ. ராசா, கபில் சில என பலரையும் பல நேரங்களில் தாம் சந்தித்திருக்கிறேன் என்றார்.

English summary
Reliance ADAG chairman Anil Ambani will have to appear as a prosecution witness on Thursday before the special court trying a 2G spectrum allocation case, with the dismissal of a plea seeking deferment of his scheduled deposition and a petition challenging the summoning of additional witnesses still pending in the Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X