For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூபாய் மதிப்பு சரிவுக்கு மத்திய அரசே காரணம்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சாடல்!

By Mathi
Google Oneindia Tamil News

Outgoing RBI governor Subbarao blames govt for sinking rupee
மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவை சந்திப்பதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் கடுமையாக புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் கூறுகையில், நாட்டின் வளர்ச்சி தடைபடுவதற்கு 2009 முதல் 2012ம் ஆண்டு வரை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையில் மத்திய அரசு தலையிட்டதே காரணம்.

சந்தை விநியோக சிக்கல்கள், அரசின் நிர்வாக பிரச்னைகள் என பல்வேறு விவகாரங்கள் இந்திய பொருளாதாரத்தில் எதிரொலிக்கின்றன.

தற்போதும் கூட நடப்பு கணக்கு பற்றாக்குறை, நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாகவே உள்ளது. இந்த பற்றாக்குறை அதிகரிப்பதற்கும், அரசின் சில நிர்வாக முடிவுகளே காரணம் என்றார்.

நாட்டின் பொருளாதார சீர்குலைவுக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் தற்போதைய ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜிதான் காரணம் என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறி வருகிறார். பிரதமர் மன்மோகன்சிங்கும் கூட, உள்நாட்டு காரணிகளும் பொருளாதார சீர்குலைவுக்கு காரணம் என்கிறார்.

ஆனால் ரிசர்வ் வங்கி ஆளுநரோ மத்திய அரசுதான் காரணம் என்று கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
On a day when the Reserve Bank of India engineered a 223-paise pullback of the rupee to 66.60, outgoing governor D Subbarao squarely blamed the government for the domestic currency's travails which he attributed to domestic structural factors. He also said the loose fiscal policy adopted by the government between 2009-2012 had constrained the RBI's monetary policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X