For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முலாயம்சிங் மீதான சொத்து குவிப்பு வழக்கை கைவிடுகிறது சிபிஐ

By Mathi
Google Oneindia Tamil News

CBI set to shut DA case against Mulayam
டெல்லி: சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், அவரது மகன் உத்தப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கை சிபிஐ கைவிட முடிவு செய்துள்ளது.

முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறது. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் இந்த விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்ய திட்டமிட்டிருக்கிறது.

அப்போது இருவர் மீதான சொத்துக் குவிப்பு புகாருக்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை கைவிட சிபிஐ திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. 2005ஆம் ஆண்டு விஸ்வநாத் சதுர்வேதி என்பவர் தொடர்ந்த பொதுநலன் வழக்கின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு 2007ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் மத்திய அரசோ, இந்த வழக்கை காரணம் காட்டியே நெருக்கடியான நேரங்களில் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவைப் பெற்று வந்தது. தற்போது ஒட்டுமொத்தமாக வழக்கையே சிபிஐ மூலம் கைவிடவும் முடிவு செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
The Central Bureau of Investigation seems finally ready to give a reprieve to Samajwadi Party chief Mulayam Singh Yadav and his chief minister son Akhilesh Yadav in the disproportionate assets case after the monsoon session of Parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X