For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்முவில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இல்லத்தில் 5 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை

By Siva
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்முவில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இல்லத்தில் தங்கியுள்ள 5 சிறுமிகள் அங்குள்ளவர்களால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

ஜம்முவில் ரோட்டரி இன்னர் வீல்ஸ் அமைப்பு மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தகளுக்கான இல்லத்தை நடத்தி வருகிறது. அந்த இல்லத்தில் தங்கியுள்ள சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு புகார் கிடைத்தது. இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்த ஜம்மு துணை கமிஷனர் அஜீத் குமார் சாஹூ ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தார்.

இந்த குழு நடத்திய விசாரணையில் அந்த இல்லத்தில் தங்கியுள்ள 5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து இல்லத்தின் பாதுகாவலர் அங்கத் குமார் மற்றும் இய்ககுனர் சுதா சர்மா ஆகியோரை கைது செய்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Five mentally challenged girls were sexually abused in Home For Mentally Challenged Children being run by Rotary Inner Wheels in Jammu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X