For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா காலகட்டங்களிலும் மளிகை வியாபாரத்தில் அதிக லாபம்! அஃரோடெக் அசத்தல்

சென்னை: எந்த வேளாண் பொருளையும் உற்பத்தி செய்துவிடும் ஆற்றல் விவசாயிகளுக்கு உண்டு. ஆனால், விளைவித்த பொருள்களைச் சந்தைப்படுத்துவதுதான் பெரும் சவால். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அஃரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்து, விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை மதிப்பு கூட்டுதல் வியாபாரத்தின் அடிப்படையில் அவர்களிடமிருந்து பெற்று நுகர்வோருக்கு நேரடியாக எளிய முறையில் உழவன் என்ற பெயரில் பேக்கிங் செய்து தரப்படுகிறது.

Agrotech giving profit to farmers by packing their production

இயற்கை விவசாயம், தற்சார்பு வாழ்வியல், மதிப்புக்கூட்டி விற்பனை செய்ற திட்டங்களை நம் விவசாயிகளுக்காக செய்து வருகிறது. விவசாயிகள் விளைவிச்ச நெல், உளுந்து, துவரம் பருப்பு, கேழ்வரகு, கம்புனு, மாப்பிள்ளைச் சம்பா, தூயமல்லி, கிச்சிலிச் சம்பா, சீரகச் சம்பா அரிசி வகைகள் என பல பொருள்களை நேரடி கொள்முதல் செய்கிறது இந்நிறுவனம்.

அஃரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் என்ற உழவர் நிறுவனம் மூலமாக 8 ஆயிரத்திற்கும் மேலான பெண் விவசாயிகள் ஆடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு திட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் இந்நிறுவனம் சில்லறை வணிகத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். வெளிச் சந்தையில் வியாபாரிகள் கொள்முதல் செய்யும் விலையைவிட, அதிக விலைக்கு விவசாயிகளிடமிருந்தே விளைபொருள்களை வாங்கி, விற்பனை செய்து வருகின்றது.

Agrotech giving profit to farmers by packing their production

அரசு கொள்முதல் நிலையங்களில் மதிப்பு கூட்டுதல் வியாபாரத்தின் அடிப்படையில் பொருட்களை வாங்கிக் கொண்டாலும் நாட்கணக்கில் காத்திருக்கின்றனர் நம் விவசாயிகள், அதுமட்டுமின்றி ஆயிரம் பிரச்சினைகளும் உண்டு. ஆனால் ஆக்ரோடெக்டில் விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டுதல் வியாபாரத்தின் அடிப்படையில் சரியான விலை கொடுத்து கொள்முதல் செய்கிறது.

"இந்த நிறுவனம் எங்களுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்கிறது நாங்கள் விளைவிக்கின்ற பொருட்களை அதுவும் இயற்கை முறையில் உற்பத்தி செய்கின்ற பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி எவ்வித அலைச்சல் இல்லாமல் உரிய விலையில் வாங்கிக் கொள்வது எங்களுக்கு மிகவும் ஊக்கமாக இருக்கிறது" என்பதாக நிறுவனத்தில் உறுப்பினராக இருக்கும் விவசாயிகள் நெகிழ்கின்றனர்.

இந்தப் பொருட்களை கிராமப்புற மக்கள் வீட்டிற்கே சென்று டோர் டெலிவரி (Door Delivery Concept) மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. வீட்டிற்குத் தேவையான மாதாந்திர மளிகை பொருட்களை அவர்கள் வீட்டிற்கே டெலிவரி செய்து,மேலும் இந்தத் திட்டத்தை கிராமப்புற பெண்களின் வசதிக்கேற்ப எளிய தவணை முறையை அஃரோடெக் அறிமுகப்படுத்தி வருகின்றது.

Agrotech giving profit to farmers by packing their production

உற்பத்தி செய்பவரும் நுகர்வோரும் எவ்வித இடைத்தரகர்கள் இன்றி பெறுவதினால் உற்பத்தி செய்பவருக்கு அவர்கள் உற்பத்தி செய்ததற்கான விலையும் நுகர்வோருக்கு சரியான விலையும் கிடைப்பதை அஃரோடெக் மார்ட்டின் (AGROTECH MART) சிறப்பாகும். மேலும் அஃரோடெக் மார்ட் தனது கிளைகளை 25 மாவட்டங்களில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

இம்மாதிரியான திட்டத்தில் முதலீட்டாளர்களை இந்நிறுவனம் வரவேற்கின்றது இத் திட்டத்தில் நீங்களும் இணைந்து முதலீடு செய்வதினால் அதிகலாபம் பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு 9884299871 Mail ID : [email protected]

"வேளாண் விவசாயிகளை காப்போம்...." "உள்நாட்டு உற்பத்தியாளரை ஆதரிப்போம்...."

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X