அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேட்டு கடையில் “லலிதா ஜுவல்லரி” மாடல்.. ஜெயங்கொண்டத்தில் 200 சவரன் நகை கொள்ளை! ஓட்டை போட்டு “ஆட்டை”

Google Oneindia Tamil News

அரியலூர்: ஜெயங்கொண்டத்தில் நகை அடகு கடையில் சுவற்றில் துளையிட்டு 200 சவரன் தங்க நகை கொள்ளை கொள்ளையர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் அஜிபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் குடும்பத்துடன் காட்டுமன்னார்கோவில் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மீன் சுருட்டி அருகே உள்ள பாப்பாக்குடி கிராமத்தில் கணேஷ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

நிச்சயதார்த்த வீட்டில் 38 சவரன் நகை மாயம்.. விசாரிச்சு பார்த்தா செம டுவிஸ்ட்! யாரைதான் நம்புவது? நிச்சயதார்த்த வீட்டில் 38 சவரன் நகை மாயம்.. விசாரிச்சு பார்த்தா செம டுவிஸ்ட்! யாரைதான் நம்புவது?

சுவற்றில் துளை

சுவற்றில் துளை


இந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி சங்கர் கடையை பூட்டி விட்டு வழக்கம் போல வீட்டிற்கு சென்று இருக்கிறார். இதையடுத்து மீண்டும் கடைக்கு சென்ற உரிமையாளர் சங்கர் மற்றும் பணியாளர்கள் கடையை திறந்து பார்த்த போது உள்ளே சுவற்றில் துளையிட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை கொள்ளை

நகை கொள்ளை

இதனை அடுத்து சங்கர் கடையில் இருந்த நகைகள் ஏதும் திருட்டுபோய் இருக்கிறதா என்று சோதனை செய்து பார்த்ததில் சுமார் 200 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடித்து செல்லப்பட்டு இருந்ததை அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மீன்சுருட்டி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

சங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்து அடையாளம் சேகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நகை அடகு கடையில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

ஆந்திர போலீஸ் விசாரணை

ஆந்திர போலீஸ் விசாரணை

மேலும் இதேபோல் ஆந்திர மாநிலம் கங்காதநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவர் துளையிட்டு வட மாநில கொள்ளையர்கள் லாக்கர் உடைக்க முடியாததால் பின்னர் பாப்பாக்குடியில் உள்ள கடையில் சுவர் துளையிட்டு உடைத்து திருடியிருக்கலாம் என்ற கோணத்தில் ஆந்திர மாநில போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 லலிதா ஜுவல்லரி கொள்ளை

லலிதா ஜுவல்லரி கொள்ளை

இதற்கு முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைந்து இருக்கும் பிரபல லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் 13 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
The police are investigating and registering a case against gold jewelery robbers who punched a hole in the wall of a jewelery pawn shop in Jayankondam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X