பெங்களூர் தமிழர் பகுதியில் தீவைப்பு. 2 கடைகள் - 12 டூவீலர்கள் கருகியது.. யார் அந்த 3 பேர் கும்பல்?
பெங்களூர்: பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஹலசூரு பகுதிக்குள் அதிகாலை 3.30 மணியளவில் நுழைந்த 3 பேர் கும்பல் தீவைத்துவிட்டு ஓடியது. இதில் காய்கறி கடை உள்பட 2 கடைகள், 12 இருசக்கர வாகனங்கள், 7 சைக்கிள்கள் எரிந்த நிலையில் அந்த 3 பேர் யார்? பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரில் தமிழகத்தை சேர்ந்த மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். குறிப்பாக சிவாஜி நகர், அல்சூர், ஹலசூரு மற்றும் பிற இடங்களிலும் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் நேற்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு ஹலசூரு மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்த ஒரு கும்பல் கடைகள், வாகனங்களுக்கு தீவைத்துவிட்டு ஓடியுள்ளது.
ஹலசூர் மார்க்கெட் அருகே காளியம்மா கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள 2 கடைகளுக்கு மர்மநபர்கள் தீவைத்துள்ளனர். இந்த தீ வேகமாக பரவியது. அருகே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள், சைக்கிள்களுக்கும் பரவியது. அதிகாலை நேரம் என்பதால் மக்கள் தூங்கி கொண்டிருந்தனர். கடைகள், வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததை அறிந்தவர்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் அழகேஷ் என்பவரின் காய்கறி கடை உள்பட 2 கடைகள் சேதமடைந்துள்ளது. மேலும் மகனின் பிறந்தநாளுக்கு ஆசையாக 150 சிசி கொண்ட பல்சர் பைக்கை புதிதாக ஒருவர் வாங்கி கொடுத்துள்ளார். அந்த பல்சர் பைக்கும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கவலையடைந்தனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், ‛‛3 பேர் கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. ஹலசூரு காளியம்மா கோவில் அருகே அதிகாலை 3.30 மணிக்குள் நுழைந்த கும்பல் தீவைத்துவிட்டு ஓடிவிட்டனர்.இருசக்கர வாகனங்கள், கடைகள் எரிந்து சேதமடைந்தது'' என்றார். இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன்போலீசார் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தீவைத்த கும்பலை தேடி வருகின்றனர்.
-
பெங்களூரில் நடைபெறும் 7-வது உலகத் திருக்குறள் மாநாடு.. தமிழ் அமைப்புகள் கலந்து கொள்ள அழைப்பு! -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications