குளிர்பானத்தில் மயக்க மருந்து! எய்ட்ஸ் நோயாளியுடன் ஓரினச்சேர்க்கை! 88 கிராம் நகைகளுடன் நண்பர் மாயம்
பெங்களூர்: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து எச்ஐவி பாதித்தவருடன் நண்பர் ஒருவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூர் புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுக்கா மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்குள்பட்ட தம்மேனஹள்ளி பகுதியில் 56 வயது ஆண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியர் ஆவார்.

இவருக்கு எச்ஐவி நோய் பாதிப்பு உள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சையும் மேற்கொண்டு வருகிறார். எனினும் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது குறித்து அவர் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இதனால் அந்த ஊழியர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவர் தனியாக இருப்பது குறித்து அவருடைய நண்பர் ஷியாம் பாட்டீலுக்கு தெரியவந்தது.
இதையடுத்து அந்த ஊழியரின் வீட்டிற்கு ஷியாம் சென்றுள்ளார். அப்போது மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அந்த தனியார் நிறுவன ஊழியருக்கு கொடுத்துள்ளார். இதையடுத்து அவருடைய முகத்தில் மயக்க மருந்தையும் ஷியாம் தெளித்துள்ளார். இதில் அந்த ஊழியர் மயக்கமடைந்துவிட்டார்.
இதையடுத்து அந்த ஊழியருடன் ஷியாம் வலுக்கட்டாயமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் அவரது வீட்டில் இருந்த 88 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ 20 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை ஷியாம் கொள்ளையடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் மறுநாள் மயக்கம் தெளிந்து எழுந்த அந்த ஊழியருக்கு தான் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் ஷியாம் தமக்கு கொடுக்க குளிர்பானம், முகத்தில் தெளித்த மயக்க மருந்தெல்லாம் நினைவுக்கு வந்தது.
இதையடுத்து அறையில் இருந்த பீரோவில் பார்த்த போது தங்க நகைகள், ரொக்கம் உள்ளிட்டவை காணாமல் போனது குறித்து அதிர்ச்சி அடைந்தார். உடனே மாதநாயக்கனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஷியாம் பட்டீலை தேடி வருகிறார்கள்.
எச்ஐவி பாதித்த நபருக்கு மயக்க மருந்து கொடுத்து வலுக்கட்டாயமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு நகை பணத்தை நண்பர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ஷியாமுக்கும் எச்ஐவி நோய் பரவியிருக்க வாய்ப்பிருக்கலாம் என சொல்லப்படுவதால் முதலில் அவரை தேடி அவருக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என போலீஸார் கருதுகிறார்கள்.


Click it and Unblock the Notifications
