இரவில் காருக்குள் கதறிய பெண்கள்.. ஸ்கூட்டர் ரோமியோக்களால் நடுங்கிய பெங்களூர்.. பரவும் வீடியோ
பெங்களூர்: பெங்களூரில் இரவில் காரில் பயணித்த 2 பெண்களை இருசக்கர வாகனத்தில் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு சேஸ் செய்து கதவை திறக்க முயன்று தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
பெங்களூரில் கர்நாடகா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பெங்களூரில் திடுக்கிட வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அதாவது சாலையின் சென்று கொண்டிருந்த காரை ஸ்கூட்டரில் விரட்டி சென்ற கும்பல் அதன் கதவை திறக்க முயன்றதும், இதனால் காரில் பயணித்த பெண் கதறிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
பெங்களூர் பொம்மனஹள்ளியை சேர்ந்தவர் சானக் கோஸ் (வயது 34). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி, ஒன்றரை வயது குழந்தை மற்றும் மாமியாருடன் நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு காரில் பயணித்தார். சானக் கோஸ் காரை ஓட்டினார். இவர்களின் கார் மடிவாளாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை அருகேசென்றது.
அப்போது காரில் ‛இன்டிகேட்டர்' போட்டப்பட்டது. இதுதொடர்பாக காரின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஆபாசமாக திட்டி உள்ளது. மேலும் அந்த கும்பல் காரை பின்தொடர்ந்து விரட்டி வந்தது. ஸ்கூட்டரில் வந்த 3 பேர் காரை நிறுத்தும்படி திடீரென கத்தியதோடு, நெருங்கி வந்து காரின் மீது ஓங்கி தட்டினர். அதோடு ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் கதவை திறக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சானக் கோஸ் வேகமாக காரை ஓட்டினர். இந்த சம்பவத்தால் காரில் இருந்த அவரது மனைவி, மாமியார் பீதியடைந்தனர். உடனடியாக சானக் கோஸின் மனைவி 112 என்ற எண்ணில் போலீசில் புகாரளித்தார். கோரமங்களா நோக்கி செல்வதாகவும், ஸ்கூட்டரில் 3 பேர் பின்தொடர்ந்து வந்து காரை தட்டுவதோடு, கதவை திறக்க முயற்சிப்பதாகவும் கதறியபடி கூறினார். மேலும் உடனே காப்பாற்றும்படியும் அவர் கதறினார்.
மேலும் அந்த ஸ்கூட்டரின் பதிவெண்ணையும் அவர் போலீசில் தெரிவித்ததோடு, அவர்கள் செல்லும் ரோட்டையும் கூறினார். இருப்பினும் அந்த கும்பல் விடவில்லை. தொடர்ந்து காரின் முன்பு ஸ்கூட்டரை ஓட்டி சென்று மறிக்க முயன்றனர். இதற்கிடையே பதற்றத்துடன் அவர்களின் கார் கோரமங்களா வந்தடைந்த நிலையில் மடிவாளா போலீசாரும் அங்கு வந்தனர்.
போலீசை பார்த்ததும் ஸ்கூட்டர் உள்ளிட்ட இருசக்கர வாகனத்தில் காரை பின்தொடர்ந்த கும்பல் எஸ்கேப் ஆனது. மொத்தம் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு அந்த கும்பல் காரை பின்தொடர்ந்துள்ளது. இதையடுத்து நடந்த சம்பவம் குறித்த போலீசிடம் அவர்கள் புகாரளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தெடர்பாக 3 பேரையும் கைது செய்தனர். கைதானவர்களின் பெயர்கள் ஜெகன்நாத், தேஜஸ், கண்ணன் என்பது தெரியவந்தது. மேலும் 2 பேர் தலைமைறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையே ஸ்கூட்டரில் வந்த 3 பேர் காரை மறிக்க முயன்றது, கார் மீது தட்டியது, கார் கதவை திறக்க முயன்றதை பாதிக்கப்பட்டவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. முன்னதாக இந்த வீடியோ போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வீடியோ மற்றும் ஸ்கூட்டரின் பதிவெண் மூலம் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபற்றி பெங்களூர் தென்கிழக்கு டிசிபி சிகே பாபா கூறகையில், ‛‛நாங்கள் 3 பேரை கைதுசெய்துள்ளோம். இதுபோன்ற பிரச்சனைகள் நடந்தால் உடனடியாக 112 என்ற அவசர எண் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தற்போது நடந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் செயலை பாராட்டுகிறேன். பிரச்சனை நேர்ந்தபோது உடனடியாக அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் தான் கைது நடவடிக்கை எளிமையானது. பெங்களூர் மாநக போலீசை பொறுத்தமட்டில் பெண்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது'' என்றார்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications