திருட்டு வேலைக்கு மாத சம்பளம் ரூ.20,000.. உள்துறை அமைச்சரின் ஊரில் சம்பவம்! புதுசா யோசிக்கிறாங்களே!
பெங்களூர்: இப்போது டிகிரி, என்ஜினியரிங் முடித்தாலும் கூட தொடக்கத்தில் பல நிறுவனங்கள் மாதம் ரூ.15 ஆயிரம் மட்டுமே சம்பளம் வழங்குகிறது. இன்னும் பல நிறுவனங்கள் ரூ.15 ஆயிரத்தை விட குறைந்த அளவில் சம்பளம் வழங்குகிறது. ஆனால் கர்நாடகா உள்துறை அமைச்சரின் சொந்த ஊரில் திருட வரும் இளைஞருக்கு ரூ.20 ஆயிரம் மாதசம்பளமாக வழங்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.
பொதுவாக சிறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முதல் பெரிய நிறுவனங்கள், பெரிய தொழிற்சாலைகள் வரை சம்பளத்துக்கு ஆட்களை வைத்து பணி செய்கின்றனர். இந்த நடைமுறை என்பது பொதுவான ஒன்றாகும். இப்படி பணியாற்றுவோருக்கு மாதசம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் திருட்டு வேலைக்கு ஒரு கும்பல் மாதசம்பளத்துக்கு ஆட்களை சேர்த்து கைவரிசை காட்டி உள்ளது, அதுவும் உள்துறை அமைச்சரின் சொந்த ஊரிலேயே நடந்து உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இது முற்றிலும் உண்மை. இப்படியான சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
அதாவது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு உள்துறை அமைச்சராக பரமேஸ்வர் உள்ளார். இவர் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் கொரட்டகெரே பகுதியில் தொடர்ந்து போர்வெல்களில் உள்ள கேபிள் வயர்கள் அடிக்கடி திருடப்பட்டு வந்தன. குறிப்பாக விவசாய நிலத்தில் உள்ள போர்வெல்களில் கேபிள் வயர்கள் திருடப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீஸ் நிலையங்களில் பல புகார்கள் குவிந்தன. இந்த புகார்கள் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையை தொடர்ந்து வந்தனர். அப்போது கொரட்டகெரே தாலுகா வட்டகெரே என்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் போர்வெல்லில் கேபிள் வயர்கள் திருடியவர்களின் உருவம் பதிவாகி இருந்தது. மேலும் அவர்களின் காரின் நம்பரும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்து 3 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் துமகூருவை சேர்ந்த வெங்கடேஷ், பெங்களூரை சேர்ந்த ராகவேந்திரா மற்றும் வினிஷ் என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் பெங்களூரில் பதுங்கி இருந்த நிலையில் காமாட்சிபாளையம் போலீசார் கைது செய்து கொரட்டகெரே போலீசாரிடம் ஒப்படைத்தனர். 3 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ராகேவந்திரா கூறிய தகவல் அதிர்ச்சியாக இருந்தது.
அதாவது ராகேவந்திரா போலீசாரிடம், ‛‛சார் எனக்கும், திருட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு மாதசம்பளமாக வெங்கடேஷ் ரூ.20 ஆயிரம் தருகிறார். நான் வேலையில்லாமல் இருந்தேன். அப்போது எனக்கு இரவு வேலை தருவதாக வெங்கடேஷ் கூறி துமகூருக்கு காரில் அழைத்து சென்றார். அப்போது அவர் போர்வெல் வயர்களை வெட்டி எடுப்பார். நான் உதவி செய்தேன். அதன்பிறகு அந்த கேபிள் வயர்களை வினிஷிடம் விற்பனை செய்வார். எனக்கு மாத சம்பளமாக ரூ.20 ஆயிரம் மட்டும் தந்தனர்'' என்றார். இதை கேட்ட போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது 3 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications