நிர்வாணமாக கார் ஓட்டிய நபர்.. பெண்ணை பார்த்ததும் செய்த செயல்.. அலறிய பெங்களூர்
பெங்களூர்: பெங்களூரில் உடலில் ஒரு துணி இல்லாமல் நிர்வாணமாக கார் ஓட்டி சென்ற நபர், பணி முடிந்து தனது வீடு திரும்பி கொண்டிருந்த பெண்ணை சீண்டினார். அவரை கட்டாயப்படுத்தி காரில் ஏற கூறிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பெங்களூரில் தங்கி பணியாற்றி வருகிறார். அவர் பிரபலமான மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தான் அவர் தனது பணியை முடித்துவிட்டு நடந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே ஒரு கார் வேகமாக வந்து நின்றது. இதனால் அவர் பயந்துபோனார். உடனடியாக அவர் சற்று விலகி சென்றார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்த சம்பவம் நடந்தது. கார் கண்ணாடியை திறந்த நபர் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக இருந்தார். மேலும் அவர் அந்த பெண்ணை காருக்குள் ஏறும்படி கூறினார். பெண் மறுத்து அங்கிருந்து வேகமாக நடந்து சென்றார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‛‛நிர்வாணமாக காரில் வந்த நபர் என்னை காருக்குள் ஏறும்படி கூறி தொல்லை கொடுத்தார். இது பட்டப்பகலில் நடந்தது. அந்த பகுதியில் மேலும் சிலர் சென்றனர். ஆனால் யாரும் எனக்கு உதவிக்கு வரவில்லை. இதனை பார்த்து காரில் இருந்த நபர் சிரித்தார்'' என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனை பார்க்கும் பலரும் சம்பந்தப்பட்ட நபரை திட்டி தீர்த்து வருகின்றனர். அவரை போலீசார் கைது செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் பெங்களூரில் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது என்று கூறி பெங்களூர் நகர போலீசாரை ‛டேக்' செய்து வருகின்றனர். தற்போது இன்ஸ்டாகிராமில் அந்த பெண் வெளியிட்ட வீடியோ வைரலாகி உள்ளது.












Click it and Unblock the Notifications