மெகாபிளான்.. கர்நாடகா தேர்தலில் காங்கிரஸை கலங்கடிக்க போகும் ‛ஆம்ஆத்மி’..கவனிக்கும் பாஜக! என்னாச்சு?
கர்நாடகா தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி 224 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் 224 தொகுதிகளிலும் போட்டியிட ஆம்ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. தற்போதைய சர்வேக்களில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் இந்த நகர்வு ‛கதர்' கட்சியை கலங்கடிக்க செய்துள்ளதாகவும், இது பாஜகவுக்கு சாதகமாக அமையலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த 2018 ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் தனித்து ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ்-ஜனதாதளம் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தது. இது ஓராண்டுக்கு பிறகு கவிழ்ந்தது.
அதன்பிறகு கர்நாடகாவில் பாஜக ஆட்சியை பிடித்தது. எடியூரப்பா முதல்வரானார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். இந்நிலையில் தான் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் கர்நாடகா மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

நான்கு முனை போட்டி
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் பெரும்பான்மையை பெற ஒரு கட்சி 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் ஆட்சியை தக்க வைக்க ஆளும் பாஜகவும், இழந்த ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றன. இது ஒருபுறம் இருக்க டெல்லி, பஞ்சாப்பில் காங்கிரஸ், பாஜகவை புறம்தள்ளி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த ஆம்ஆத்மி கர்நாடகா தேர்தலிலும் கால்பதிக்க முடிவு செய்துள்ளது. இதனால் இந்த முறை கர்நாடகா தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது.

224 தொகுதிகளுக்கும் ஆம்ஆத்மி குறி
இந்நிலையில் தான் ஆம்ஆத்மி கட்சி மாநிலத்தில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி ஆம்ஆத்மி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அதிஷி உறுதிப்படுத்தினார். இதுபற்றி அவர், ‛‛காங்கிரஸ், பாஜக கட்சியினர் ஆம்ஆத்மி தேர்தல் வாக்குறுதிகளை காப்பி அடிக்கின்றன. டெல்லியில் செயல்பாட்டில் உள்ள மொஹல்லா கிளினிக் திட்டத்தை நம்மா கிளினிக் என பாஜகவும், 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர். மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி கட்சி களமிறங்கும். இதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது'' என்றார். இதன்மூலம் ஆம்ஆத்மி கட்சி 224 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது உறுதியாகி உள்ளது.

விழிக்கும் தேசிய கட்சிகள்
ஆம்ஆத்மி கட்சியின் இந்த முடிவால் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக கட்சிகள் விழிக்கின்றன. டெல்லி, பஞ்சாப், கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக, காங்கிரஸின் ஓட்டுக்களை ஆம்ஆத்மி கட்சி பிரித்தது. இதில் டெல்லி, பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியையும் பிரித்தது. குஜராத், கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆம்ஆத்மி பின்னடைவை ஏற்படுத்தியதாக கதர் கட்சியினரே கூறி வரும் நிலையில் தான் ஆம்ஆத்மியின் கர்நாடகா தேர்தல் போட்டியும் காங்கிரஸ், பாஜக கட்சியினருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கலங்கும் காங்கிரஸ்
அதேநேரத்தில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சியினருக்கு ஆம்ஆத்மியின் நகர்வு என்பது சவாலான ஒன்றாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‛‛தற்போதைய நிலவரப்படி வந்த கர்நாடகா தேர்தல் தொடர்பான சர்வேக்களில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கி உள்ளது. கர்நாடகாவில் ஆட்சியமைக்க தேவையான 113 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காது என சர்வேக்கள் கூறினாலும் காங்கிரஸ் மிகப்பெரிய கட்சியாக உருவாகும் என சர்வேக்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் 100க்கும் அதிக இடங்களிலும், பாஜக அதிகபட்சமாக 80 இடங்களில் தான் வெற்றி பெறும் என கூறப்படுகிறது. இதனால் ஜனதாதளம்(எஸ்) கட்சி 40 இடங்கள் வரை வெற்றி பெறலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தற்பேது ஆம்ஆத்மி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டால் இது மாற்றத்தை ஏற்படுத்தலாம். இது பஞ்சாப், குஜராத் , கோவா தேர்தலை போல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். '' என தெரிவித்துள்ளனர்.
-
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு?












Click it and Unblock the Notifications