நாட்டின் முதல் மனநல சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. பெங்களூர் அமாஹா ஹாஸ்பிட்டல் சிறப்புகள் என்ன
பெங்களூர்: இந்தியாவின் முன்னணி மனநல சேவை நிறுவனமான அமஹா, நாட்டின் முதல் தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மனநல மருத்துவமனையைப் பெங்களூரில் தொடங்கியுள்ளது. தானிசந்திராவில் அமைந்துள்ள இந்த அதிநவீன மருத்துவமனை மிதமான மற்றும் தீவிர மனநல கோளாறுகளுக்கான உள்நோயாளிகள் சிகிச்சையில் கவனம் செலுத்துகிறது. கருணையோடு ஆதார அடிப்படையிலான மனநல சிகிச்சையை வழங்குவதற்கான அமஹாவின் அர்ப்பணிப்பை இது உறுதிப்படுத்துகிறது.
விரிவடையும் நெட்வொர்க்
பெங்களூர், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் உள்ள அமஹாவின் வெளிநோயாளிகள் மையங்கள் மூலம் 40,000-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இந்த 27 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, ஸ்கிசோஃப்ரினியா, பைபோலார் டிஸ் ஆர்டர், ADHD, மன அதிர்ச்சி, மனச்சோர்வு மற்றும் போதைப்பொருள் அடிமைத்தனம் போன்ற நிலைகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமஹாவின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியும் இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற மனநல மருத்துவருமான டாக்டர் அமித் மாலிக் மற்றும் இணை நிறுவனர் நெஹா கிருபால் ஆகியோர் இந்த மருத்துவமனைக்குத் தலைமையேற்றுள்ளனர். டிஜிட்டல், வெளி நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் ஆதரவு அமைப்புகளை ஒருங்கிணைத்து இவர்கள் ஒரு தளத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம், அமஹா இப்போது இந்தியாவின் மிகப் பெரிய தனியார் மனநல சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இது தொடர்பாக டாக்டர் மாலிக் கூறுகையில், "கடந்த ஒன்பது ஆண்டுகளில், அமஹா மருத்துவமனை சிறந்த தரமான சிகிச்சைக்கு முன்னுரிமை அளித்து, இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப் பெரிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மனநல சேவை நிறுவனமாக வளர்ந்துள்ளது. இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற ஒரு மனநல மருத்துவராக எனக்குத் தனிப்பட்ட முறையில் முக்கியமானதாக இருக்கிறது. மனநலப் பாதிப்பால் குடும்பங்கள் அனுபவிக்கும் வேதனைகளைக் குறித்து எனக்குத் தெரியும்" என்றார்.
சிறப்புகள்
- இந்த மருத்துவமனை தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.
- மனநல சிகிச்சைக்காக மட்டுமே பிரத்தியேக உள்நோயாளிகள் பிரிவைக் கொண்ட இந்தியாவின் முதல் தனியார் மருத்துவமனையாகும்
- மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள், மனநல செவிலியர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நிபுணர்களைக் கொண்ட பல்துறை மருத்துவக் குழு இங்குச் செயல்படுகிறது.
- டீப் டிரான்ஸ்கிரேனியல் மேக்னடிக் ஸ்டிமுலேஷன் (Deep TMS), கெட்டமைன்-உதவி சிகிச்சை மற்றும் எலக்ட்ரோகன்வல்சிவ் தெரபி (ECT) போன்ற மேம்பட்ட சிகிச்சைகள் இங்குக் கிடைக்கின்றன.
- நோயாளிக்கு ஆறுதல், பாதுகாப்பு மற்றும் குணமடைதலை நோக்கமாகக் கொண்ட சூழல் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
- 15-க்கும் மேற்பட்ட மொழிகளில், 24/7 இணக்கமான சேவைகள் வழங்கப்படுகின்றன.
- சிகிச்சையின் தொடர்ச்சியை உறுதி செய்ய வெளி நோயாளிகள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அமஹாவின் மருத்துவ இயக்குநர் டாக்டர் திவ்யா ஜி நல்லூர் கூறுகையில், "எங்கள் மருத்துவக் குழுவில், 200க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள் மற்றும் வல்லுநர்கள் நோயாளிகளின் குடும்பங்களுக்கு 24/7 உதவ ரெடியாக உள்ளனர்.. ஒவ்வொரு நோயாளியின் ஆறுதலையும் பாதுகாப்பையும் முதன்மையாகக் கருதுகிறோம்.. சிகிச்சை முறைகள், ஊட்டச்சத்து உணவுத் திட்டங்கள் மற்றும் குணமடைதலை ஊக்குவிக்கும் வகையிலான இடங்கள் என்று எல்லாம் சரியாக வடிவமைத்துள்ளோம். மனநலப் பராமரிப்பில் கண்ணியம், கருணை மற்றும் அறிவியலைச் சம அளவில் நிலைநிறுத்த வேண்டும் என்ற எங்களின் நம்பிக்கையை இந்த மருத்துவமனை பிரதிபலிக்கிறது" என்றார்.
பாராட்டு
இந்த முயற்சியைக் கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் பாராட்டினார். அவர் இது குறித்துக் கூறுகையில், "இளைஞர்கள் மற்றும் பெரியவர்களிடையே அதிகரித்து வரும் மனநல சவால்களைச் சமாளிக்க, அமஹாவைப் போன்ற சிறப்பு மற்றும் பல்துறை சிகிச்சையை வழங்கும் நிறுவனங்கள் தேவை. கர்நாடகாவின் பொதுச் சுகாதார சேவைகளில், மனநல சிகிச்சை இப்போது 14 முக்கிய சுகாதார நிலைகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது " என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பாகக் கர்நாடக வருவாய் அமைச்சரின் மனைவி மீனாக்ஷி கிருஷ்ணா பைரே கவுடா கூறுகையில், "சுமார் 200 மில்லியன் இந்தியர்கள் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமஹாவைப் போன்ற மையங்கள் அவசியமானவை.. சொல்லப்போனால் காலதாமதமானவை. இப்போது இதுபோல பல மையங்கள் தேவை" என்றார்.
அமஹாவின் அணுகுமுறையையும், மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உள்நோயாளிகள் சூழலையும் NIMHANSஇன் மூத்த பேராசிரியர் டாக்டர் பிரபா சந்திரா பாராட்டினார்.
அமஹாவின் சேவை மாடல்
- முக்கிய பெருநகரங்களில் வெளி நோயாளிகள் மையங்கள்
- 600-க்கும் மேற்பட்ட சுய-பராமரிப்பு டூல்களுடன் கூடிய ஆன்லைன் சிகிச்சை தளம்
- 'சில்ட்ரன் ஃபர்ஸ்ட்' நிறுவனத்தின் மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான மனநல சேவைகள்
- சிக்கலான மனநல பிரச்சினைகளைக் கையாளும் குடும்பங்களுக்கு 24/7 பராமரிப்பு
நெஹா கிருபால் மேலும் கூறுகையில், "தற்கொலை, ஸ்கிசோஃப்ரினியா மற்றும் தீவிர நெருக்கடியான சூழ்நிலைகளில் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவம் எங்களுக்குத் தெரியும். இந்த மருத்துவமனையின் நோக்கமே அதுதான்" என்று கூறினார்.
அமஹா நிறுவனம் பற்றி
அமஹா என்பது இந்தியாவின் முதன்மையான மனநல சிகிச்சை அமைப்பாகும். உலகத் தரமான மனநல மற்றும் உளவியல் சிகிச்சையை இது வழங்குகிறது. நேரடி மற்றும் டிஜிட்டல் தளங்களில் வலுவான இருப்பைக் கொண்டுள்ள அமஹா, கலாச்சார ரீதியாக இணக்கமான, ஆதார அடிப்படையிலான சிகிச்சையைத் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு வழங்குகிறது. இந்தியாவில் மனநலப் பராமரிப்பின் தரத்தை உயர்த்துவதும், விரிவான சிகிச்சை அளிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட சிரமத்தைக் குறைப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
-
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக்












Click it and Unblock the Notifications