பகுத்தறிவாளரா? அப்புறம் ஏன் கடவுள் பெயரில் பதவி பிரமாணம்.. சித்தராமையாவுக்கு கிளம்பிய எதிர்ப்பு
பெங்களூர்: கர்நாடகா முதல்வராக நேற்று சித்தராமையா கடவுள் பெயரில் பதவியேற்றார். இந்நிலையில் தான் பகுத்தறிவாளர் என தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் சித்தராமையாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. 13ல் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்று மெஜாரிட்டியை பெற்றது.

இந்த தேர்தலில் பாஜக தோல்வியடைந்து ஆட்சியை காங்கிரஸ் கட்சியிடம் பறிகொடுத்துள்ளது. தேர்தலில் பாஜக 66 இடங்களில் ஜெயித்தது. ஜேடிஎஸ் 19 இடங்களிலும் மற்றவர்கள் 4 இடங்களிலும் வாகை சூடினர்.
இதையடுத்து நேற்று கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் நேற்று பதவியேற்றனர். மேலும் 8 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். சித்தராமையா கடந்த 2013-2018 வரை கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது முதல்வராக செயல்பட்டார். தற்போது 2வது முறையாக அவர் முதல்வர் அரியணையில் அமர்ந்துள்ளார்.
முதல்வராகி உள்ள சித்தராமையா மூட பழக்க வழக்கங்களுக்கு எதிரான கொள்கை உடையவர். நிதி அமைச்சராக பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும் கூட நல்லநாள், நல்ல நேரத்தை அவர் பார்ப்பது இல்லை. மேலும் அவர் கோவிலுக்கும் அடிக்கடி செல்வது இல்லை. ஏதேனும் திட்டங்களை துவங்கி வைப்பது இல்லாவிட்டால் ஆதரவாளர்கள் அழைத்தால் மட்டுமே கோவிலுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் பகுத்தறிவாளராக அவர் அறியப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் நேற்று சித்தராமையா 2வது முறையாக முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த வேளையில் சித்தராமையா கடவுள் பெயரில் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்தை எடுத்தார். சித்தராமையாவின் இந்த செயல் தான் தற்போது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது நாத்திகவாதி, பகுத்தறிவாளர் என தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் சித்தராமையா ஏன் கடவுள் பெயரில் பதவி பிரமாணம் எடுத்து கொண்டார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுபற்றி கன்னட நடிகராகவும், சமூக செயற்பாட்டாளருமான சேத்தன் குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
சேத்தன் குமார் தனது பேஸ்புக் பக்கத்தில், ‛‛சித்தாந்தவாதி, பகுத்தறிவாதி என அழைக்கப்படும் சித்தராமையா கர்நாடகா முதல்வராக பதவியேற்ற கடவுளின் பெயரால் பதவியேற்றாரா? கடவுள் என்றால் என்ன? யார் கடவுள்? எங்கே கடவுள்? என்ற கேள்விகளை எழுப்புவதோடு, இது அவரது கொள்கை ரீதியிலான நல்ல தொடக்கம் அல்ல'' என தெரிவித்துள்ளார்.
மேலும் இன்னொரு பதிவில் அமைச்சராக பொறுப்பேற்ற சித்தராமையாவின் ஆதரவாளரான சதீஷ் ஜார்கிகோளியை அவர் விமர்சனம் செய்துள்ளார். சதீஷ் ஜார்கிகோளி, புத்தர்-பசவண்ணர்-அம்பேத்கர் பெயரில் பதவியேற்ற நிலையில் இதுபற்றி சேத்தன் குமார், ‛‛சதீஷ் ஜார்கிகோளி புத்தர்-பசவண்ணர்-அம்பேத்கர் பெயரில் அமைச்சராக பதவியேற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியும் கூட தனது சுயலாபத்துக்கான சமத்துவத்துக்கானவர்களை பயன்படுத்துகிறது'' என விமர்சனம் செய்துள்ளார்.
முன்னதாக சமீபத்தில் இந்துத்துவா என்பது பொய்களின் மூட்டை எனும் வகையில் ட்விட்டரில் சேத்தன் குமார் பதிவிட்டு இருந்தார். இதுகுறித்து பெங்களூர் சேஷாத்திரிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில் சேத்தன்குமார் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜாமினில் வெளியே வந்தார். இவர் அடிக்கடி பாஜக மற்றும் இந்துத்துவா கொள்கைகளை விமர்சனம் செய்து வரும் நிலையில் தான் சித்தராமையா மற்றும் சதீஷ் ஜார்கிகோளியை சாடியுள்ளார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications