பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூ.23 கோடி! பெங்களூரில் பிரதமர் மோடிக்காக பளபளத்த ரோடு! 2 நாளில் பள்ளமாகி பல் இழிக்கிறது!

Google Oneindia Tamil News

பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடியின் வருகைையொட்டி பெங்களூரில் ரூ.23 கோடி செலவில் ரோடுகள் புனரமைக்கப்பட்டன. இந்நிலையில் அவர் வந்து சென்ற அடுத்த சில நாட்களிலேயே அந்த ரோடுகள் பள்ளம் விழுந்து பல் இழிப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

சர்வதேச யோகா தினம் ஜூன் 21ல் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மைசூர் அரண்மனை வளாகத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக கர்நாடகம் சென்றார். ஜூன் 20 திங்கட்கிழமை மதியம் பெங்களூர் சென்ற மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்பிறகு அவர் மைசூர் சென்று யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

யோகாதின விசிட்.. வெறும் 22.30 மணிநேரம் தான்.. பிரதமர் மோடிக்காக ரூ.56 கோடி செலவு செய்த கர்நாடகம்!யோகாதின விசிட்.. வெறும் 22.30 மணிநேரம் தான்.. பிரதமர் மோடிக்காக ரூ.56 கோடி செலவு செய்த கர்நாடகம்!

பெங்களூரில் ரூ.23 கோடி செலவு

பெங்களூரில் ரூ.23 கோடி செலவு

பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்காக பெங்களூர் மற்றும் மைசூரில் சாலை புனரமைக்கப்பட்டன. மேலும் சாலை தடுப்புகள் சரிசெய்யப்பட்டு, வண்ணங்கள் பூசப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி பெங்களூரில் மட்டும் 14.05 கிலோமீட்டர் ரோடு மேம்படுத்தப்பட்டது. 2.4 கிலோமீட்டர் பல்லாரி ரோடுக்கு ரூ.4.06 கோடி, 0.9 கிலோமீட்டர் தும்கூர் ரோட்டுக்காக ரூ.1.55 கோடி, 3.6 கிலோமீட்டர் யூனிவர்சிட்டி ரோட்டுக்காக ரூ.6.05 கோடி, 0.15 கிலோமீட்டர் மைசூர் ரோட்டுக்காக ரூ.35 லட்சம் கொம்மகட்டா ரோட்டின் 7 கிலோமீட்டர் சாலை மேம்பாட்டுக்காக ரூ.11.5 கோடி செலவு செய்யப்பட்டன.

பள்ளம் விழுந்த ரோடு

பள்ளம் விழுந்த ரோடு

இந்நிலையில் பெங்களூரு யூனிவர்சிட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட ரோடு இரவு நேரத்தில் பெய்த கனமழைக்கு தாக்குப்பிடிக்கவில்லை. இதனால் அந்த சாலை குண்டும் குழியுமாக மாறியது. இதேபோல் பல இடங்களில் போடப்பட்ட சாலைகள் பெயர்ந்து உள்ளன. பிரதமர் மோடியின் வருகைக்காக புதிதாக அமைக்கப்பட்ட சிலை அடுத்த சில நாட்களில் பள்ளம் விழுந்து சேதமடைந்து இருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

விசாரணைக்கு உத்தரவு

விசாரணைக்கு உத்தரவு

நடவடிக்கை

ஒப்புக்கொண்ட அதிகாரிகள்

ஒப்புக்கொண்ட அதிகாரிகள்

பெங்களூரு மாநகராட்சி ஆணையர் துஷார் கிரிநாத், சில இடங்களில் சாலை சேதமடைந்துள்ளது என்று ஒப்புக்கொண்டார். ஆனால் அது கனமழையால் மட்டுமே நடந்தது என்றும் சாலையின் முழு நீளமும் சேதமடைந்ததாகக் கூறுவது நியாயமில்லை என்றும் அவர் தெிவித்தார். இதுபற்றி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர் கூறுகையில், "சில இடங்களில் ஏற்பட்ட சேதம் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. மழை பெய்து, முறையான க்யூரிங் இல்லாததால், ஒட்டுவேலை உரிந்து இருக்கலாம். மீண்டும் சரி செய்ய சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் கூறுவோம்'' என்றார்.

மொத்த செலவு எவ்வளவு?

மொத்த செலவு எவ்வளவு?

பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை மதியம் 12.30 மணிக்கு பெங்களூர் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று மைசூர் சென்றார். மைசூரில் செவ்வாய்க்கிழமை காலை மைசூர் அரண்மனை வளாகத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பிறகு காலை 11 மணிக்கு மைசூரில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். மோடியின் இந்த பயணத்துக்காக மட்டும் பெங்களூர், மைசூரில் ரோடு புனரமைப்பு, புதிதாக அமைத்தல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்காக மொத்தம் ரூ.56 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

English summary
Roads in Bangalore have been rehabilitated at a cost of Rs 23 crore following the visit of Prime Minister Narendra Modi. In the next few days after his arrival, the public and motorists are suffering due to the caves of the roads.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X