மக்களே உஷார்.. பெங்களூருக்கு மஞ்சள் அலர்ட்.. புரட்டிப் போட்ட மழை.. பல பகுதிகளில் வெள்ளம்
பெங்களூர்: பெங்களூரில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் பல சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் 3 நாட்கள் பெங்களூர் உள்பட தென்கர்நாடகா மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான ‛எல்லோ அலர்ட்' விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல இடங்களில் பெய்து வருகிறது. அதேபோல் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நேற்று பெங்களூரில் பல இடங்களில் கனமழை பெய்தது.

இந்நிலையில் தான் கர்நாடகா மாநில தேசிய பேரிடம் கண்காணிப்பு மையம் நேற்று காலையில் பெங்களூருவுக்கு எச்சரிக்கை விடுத்தது. பெங்களூரின் பல இடங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக அந்த மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி நேற்று மாலையில் சில இடங்களில் லேசாக மழை பெய்தது. அதன்பிறகு இரவில் பல இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக பெங்களூரின் கிழக்கு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பென்னிகானஹள்ளி மெட்ரோ நிலையம், ராமமூர்த்தி நகர், சாந்தி நகர், மைசூர் வங்கி சர்க்கிள், டவுன்ஹால் மற்றும் மல்லேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.

இதுதவிர ஸ்ரீராம்புரம், லிங்கராஜபுரம் பகுதியில் உள்ள சுரங்கபாதைகளில் மழைநீர் தேங்கியது. மேலும் குக்கி டவுன், சிகே கார்டன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பல சாலைகளில் முட்டு அளவுக்கு தண்ணீர் வழிந்தோடியது. இதனால் டூவீலர்களில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இன்று காலையிலும் பல இடங்களில் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. முன்னதாக பெங்களூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு முதல் வெள்ளம் தொடர்பாக ஏராளமான புகார்கள் சென்றனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு சென்று தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

துணை முதல்வரும், பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சருமான டிகே சிவக்குமார் இரவில் ஹட்சன் சர்க்கிளில் உள்ள பெங்களூர் தலைமை அலுவலகத்துக்கு சென்று அங்குள்ள ‛வார் ரூமில்' ஆய்வு மேற்கொண்டார். வெள்ளம் தொடர்பான புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ள நிவாரண பணிகளை சுணக்கம் இன்றி மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தற்போது வரை பெங்களூர் எலகங்கா மண்டலத்தில் 160 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. இன்று காலையிலும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தான் இன்று முதல் 3 நாட்களுக்கு பெங்களூர் உள்பட சில மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சர் அலர்ட்-டை (Yellow Alert) இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
அதன்படி கர்நாடகாவின் தெற்கு மாவட்டஙகளான பெங்களூர், கோலார், துமகூரு, சிக்பள்ளாப்பூர், சிவமொக்கா, ஹாசன், மண்டியா, மைசூர் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்கள் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதுஎன தெரிவித்துள்ளது. மேலும் இந்த நாட்களில் பெங்களூரில் மலை நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
-
டிகே சிவக்குமாருக்கு புதிய சிக்கல்.. பெங்களூர் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து போர்க்கொடி.. பரபரப்பு -
பெங்களூரில் 1 BHK-க்கு 40 ஆயிரம் வாடகை.. ஐடி பெண் ஊழியர் எடுத்த விசித்திர முடிவு.. பெரும் விவாதம் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம்












Click it and Unblock the Notifications