"தாம்பத்தியத்துக்கு மறுப்பு".. காதல் மனைவிக்கு இளைஞர் கொடுத்த தண்டனை.. பெங்களூரில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காதல் திருமணம் செய்துவிட்டு தாம்பத்தியத்துக்கு மறுத்து தொடர்ந்து ரீல்ஸ் பார்த்து வந்த மனைவியை அவரது கணவரே கழுத்தை இறுக்கி கொன்ற சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. மனைவியை கொன்றுவிட்டு பீகாரில் தலைமறைவான இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில் கொலையின் பின்னணி பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

பீகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தை சேர்ந்தவர் தீரஜ் குமார் (வயது 24). இவரும், ரிமா குமாரி என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

bihar-man-killed-his-wife-resisted-having-sexual-relations-with-him-in-bengaluru

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தீரஜ் குமார் குடும்பத்தினரை மீறி யாருக்கும் தெரியாமல் ரிமா குமாரியை திருமணம் செய்தார். அதன்பிறகு இருவரும் பெங்களூர் வந்தனர்.

பெங்களூரு அருகே கும்பலகோடு பகுதியில் உள்ள கேருபாளையாவில் 4வது மாடியில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் தங்கினர். தீரஜ் குமார் அங்குள்ள தொழிற்சாலையில் வேலைக்கு சென்றார். கடந்த மாதம் 29ம் தேதி ரிமா தேவியை தேடி தோழி ஒருவர் தேடிப்போனார். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கும்பலகோடு போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது போர்வைக்குள் ரிமா குமாரியின் உடல் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது. அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. கணவர் தீரஜ் குமார் வீட்டில் இல்லை. இதனால் அவர் தான் கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பீகார் சென்று தீரஜ் குமாரை பிடித்து விசாரித்தனர். அப்போது மனைவி ரிமா குமாரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

தீரஜ்குமாரை போலீசார் கைது செய்து பெங்களூர் அழைத்து வந்தனர். இதுபற்றி போலீசார் கூறியதாவது: ''ரிமா குமாரியும், தீரஜ் குமாரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து பெங்களூரில் வசித்து வந்தனர். திருமணமான அடுத்த சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ரிமா குமாரி தாம்பத்தியத்துக்கு மறுத்து வந்துள்ளார். அதோடு வீட்டில் தனக்கு மட்டுமே சமைத்து கொண்டு தீரஜ் குமாருக்கு உணவு வழங்க மறுத்துள்ளார்.

இதுதவிர அதிகமான நேரங்களை செல்போனில் ரீல்ஸ் பார்ப்பதில் செலவழித்துள்ளதோடு, பெங்களூர் வேண்டாம்.. பீகாருக்கே சென்று விடலாம் என்று தொடர்ந்து கூறி வந்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்றும் வேலைக்கு சென்று தீரஜ் குமார் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் சாப்பாடு கேட்டபோது தனக்கு மட்டுமே சமைத்து இருப்பதாக ரிமா குமாரி கூறியுள்ளதோடு, ஹோட்டலில் போய் சாப்பிடும்படி கூறியுள்ளார்.

தீரஜ்குமார் ஹோட்டலில் போய் சாப்பிட்டு வந்துள்ளார். அதன்பிறகு இரவில் தாம்பத்தியத்துக்கு அழைத்துள்ளார். அப்போதும் ரிமா குமாரி தாம்பத்திய உறவுக்கு ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து ரீல்ஸ் பார்த்து வந்துள்ளார். இதனால் தீரஜ்குமார் கோபமாகி திட்டி உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ரிமா குமாரி கட்டையை எடுத்து தீரஜ்குமாரை தாக்கி உள்ளார். இதில் கடும் சினம் கொண்ட தீரஜ்குமார், வீட்டில் இருந்த துப்பட்டாவை எடுத்து மனைவி ரிமா குமாரியின் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார். அதன்பிறகு உடலை போர்வைக்குள் சுற்றி வைத்து வீட்டை பூட்டிவிட்டு பீகாருக்கு சென்று தலைமறைவான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்'' என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+