பதற்றம்.. பெங்களூரில் பந்த்தால் விழுந்த 144 தடை.. தமிழர் பகுதிகளில் போலீஸ் குவிப்பு.. பரபரப்பு
பெங்களூர்: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை எதிர்த்து அறிவிக்கப்பட்ட பந்த்திற்கு பெங்களூர் போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. அதோடு பெங்களூர் நகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பந்த் அறிவித்த அமைப்பினர் விதிகளை மீறி பந்த்தை தொடங்கி உள்ளனர்.
கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் திறக்க உத்தரவிட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அதனை செயல்படுத்த அறிவுறுத்தியது.

இதனால் கர்நாடகா அரசு வேறு வழியின்றி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லாத சூழலில் தமிழகத்துக்கு எப்படி தண்ணீர் திறக்கலாம்? என கர்நாடகா விவசாய அமைப்பினர் மற்றும் கன்னட அமைப்பினர் பந்த் நடத்தி வருகின்றனர்.
மண்டியாவில் பந்த் முடிந்துள்ள நிலையில் இன்று பெங்களூரில் பந்த் நடந்து வருகிறது. கர்நாடகா ஜலசம்ரக்சனா சமீதி தலைமையில் இந்த பந்த் நடத்தப்பட உள்ளது. இதற்கு 100க்கும் அதிகமான அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் பெங்களூரில் இன்று பந்த் நடத்த போலீசார் அனுமதி கொடுக்காத நிலையில் 144 தடையை மீறி அங்கு பந்த் நடத்தப்பட்டு வருகிறது.
இதுபற்றி பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறியதாவது: பெங்களூர் நகரில் பந்த் நடத்த அனுமதியில்லை. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பந்த் நடத்த அனுமதியில்லை என தெரிவித்துள்ளது. இதுபற்றி பந்த்துக்கு அழைப்பு விடுத்த அமைப்பின் நிர்வாகிகளிடம் கூறியுள்ளோம். மேலும் இதுதொடர்பான மனு உயர்நீதிமன்றத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனால் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை (இன்று) நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி 5 பேருக்கு அதிகமானவர்கள் ஒரே இடத்தில் கூடக்கூடாது. மேலும் பெங்களூர் நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதோடு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தாலோ அல்லது பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தாலோ பந்த் நடத்தும் அமைப்பின் நிர்வாகிகள் தான் பொறுப்பேற்க வேண்டும். இதுபற்றி அமைப்பின் நிர்வாகிகளுக்கு தெரிவித்து உள்ளோம். நகரில் பதற்றமான இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்'' என்றார். அதன்படி தமிழர்கள் அதிகம் வசிக்கும் காந்தி நகர், ஸ்ரீராமபுரம், சிவாஜிநகர், மாகடி ரோடு, அல்சூர், இந்திரா நகர் உள்பட பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு ரோந்து வாகனத்தில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரமாக தொடங்கி உள்ளனர்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications