நீங்க போராடியது போதும்..பெங்களூரில் கரப்பான்பூச்சி கட்சி போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காங்.,அரசு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை ராஜினாமா செய்யக்கோரி டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தேசியக்கொடி போராட்டத்தை அறிவித்துள்ளது. அதேபோல் காங்கிரஸ் ஆளும் கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இன்று டெல்லியில் கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் தேசியக்கொடி போராட்டத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார்.

bengaluru cockroach townhall

இன்று மாலை 5 மணிக்கு சென்ட்ரல் பார்க்கை நோக்கி தேசியக்கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தப்படும் என்று அபிஜித் தீப்கே அறிவித்தார். இதில் ஏராளமானவர்கள் வந்து பங்கேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த போராட்டத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை போட மறுத்துவிட்டது. இதையடுத்து டெல்லி போலீசார் இந்த போராட்டத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சென்ட்ரல் பார்க்கில் 11 பேர் குழுவினர் மட்டுமே தேசியக்கொடியை ஏந்தி தேசியக்கீதம் பாடம் முடியும். இந்த வேளையில் தேசியக்கொடிக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் எனக்கூறிய போலீசார் கன்னாட் பிளேஸ் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 163யை செயல்படுத்தி உள்ளது. இது முந்தைய 144 தடை உத்தரவாகும்.

இதனால் டெல்லியில் பதற்றம் நிலவி வருகிறது. அசம்பாவிதங்களை தடுக்க 6 ஆயிரம் போலீசார் மற்றும் 220 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மும்பை, பெங்களூரிலும் இன்று போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அனுமதி கோரினர். பெங்களூரில் இன்று மாலையில் டவுன்ஹால் பகுதியில் தேசியக்கொடியை கையில் ஏந்தி போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அனுமதி கோரினார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஞானேஷ் குமாருக்கு எதிராக ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இந்த போராட்டத்துக்கு கரப்பான்பூச்சி கட்சியினருக்கு பெங்களூரில் எளிதாக அனுமதி கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பெங்களூர் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. பெங்களூரை எடுத்து கொண்டால் அரசியல் கட்சியினர் உள்பட அனைத்து அமைப்பினம் சுதந்திர பூங்காவில் தான் போராட்டம் நடத்த வேண்டும். உயர்நீதிமன்ற அறிவுரையை தொடர்ந்து பெங்களூரில் போராட்டம் நடத்துவதற்கு சுதந்திர பூங்கா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் டவுன்ஹாலில் போராட்டம் நடத்த அனுமதியில்லை. டவுன்ஹால் என்பது மிகச்சிறிய பகுதியாகும். அங்கு ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் குவிந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனை மனதில் வைத்து தான் பெங்களூரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அங்கு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+