கொர்ர்ர்.. வெள்ள பாதிப்பு ஆலோசனையில் அசந்து தூங்கிய கர்நாடக அமைச்சர்! சூப்பருங்க.. காங்கிரஸ் கிண்டல்
பெங்களூர்: பெங்களூரில் ஏற்பட்டுள்ள கடுமையான மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஒருவர் உறங்கியதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதில் கர்நாடகாவில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனிடையே, நேற்று முன்தினம் இரவு முதல் பெங்களூரில் பெய்து வந்த கனமழையால் அந்த நகரமே வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களும் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன.

பெங்களூரில் கடும் பாதிப்பு
இதனால் பெங்களுர் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலை முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் அலுவலகங்களுக்கு செல்ல முடியவில்லை. மேலும், கனமழையால் பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டிருப்பதால் அத்தியாவசி உணவுப்பொருட்கள் கிடைக்காமலும் பெங்களூர் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

ஆலோசனைக் கூட்டம்
இந்நிலையில், கர்நாடாகாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும், அதனை சரிசெய்யும் நடவடிக்கைகள் குறித்தும் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் தூக்கம்
இந்தக் கூட்டம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. அப்போது வருவாய்த் துறை அமைச்சர் அசோக் தூங்குவது போல கண்ணை மூடிக்கொண்டிருந்தார். இதையடுத்து, அமைச்சர் அசோக்கை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. வரலாறு காணாத வெள்ளத்தில் மக்கள் சிக்கித் தவிக்கும் போது ஒரு அமைச்சரால் எப்படி தூங்க முடிகிறது என அக்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன.

காங்கிரஸ் கிண்டல்
இதுகுறித்து கர்நாடகா காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் அசோக் தூங்குவது போன்ற புகைப்படம் பதிவிடப்பட்டு, அதற்கு கீழே, "கர்நாடகா தலைநகர் பெங்களூரும், மற்ற பல மாவட்டங்களும் மழை வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கு தீர்வு காணும் கூட்டத்தில் நமது அமைச்சர் அசோக் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறார். எதை பற்றியும் கவலை இல்லாத மனிதரால்தான் இப்படி இருக்க முடியும். அவரை பார்ததால் மக்கள் ஆரவாரமிக்க சந்தையில் கூட அவரால் நிம்மதியாக தூங்க முடியும் எனத் தோன்றுகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது
-
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications