பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொய் சொன்னார்.. மருத்துவமனையிலிருந்து எஸ்கேப்.. கொரோனாவோடு ஊர் சுற்றிய பெங்களூர் பெண்.. பகீர் செய்தி

பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவோடு பல்வேறு ஊர்களுக்கு சுற்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவோடு பல்வேறு ஊர்களுக்கு சுற்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் தற்போது 107 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. தென் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கர்நாடகாவில் இந்த வைரஸ் 6 பேருக்கு பரவி இருக்கிறது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக கர்நாடகாவில் ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பெங்களூரில் கூகுள் ஊழியர் ஒருவருக்கு கொரோன வைரஸ் ஏற்பட்டதும் அவரின் மனைவி வைரஸோடு ஊர் ஊராக சுற்றியதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 வேகனிசம் பரப்பும் விஷம வதந்தி.. சிக்கன், மட்டன் சாப்பிட்டால் கொரோனா வருமா? உண்மை என்ன? வேகனிசம் பரப்பும் விஷம வதந்தி.. சிக்கன், மட்டன் சாப்பிட்டால் கொரோனா வருமா? உண்மை என்ன?

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

கூகுள் நிறுவனத்தை சேர்ந்த அந்த ஊழியருக்கு பிப்ரவரி தொடக்கத்தில் கல்யாணம் ஆனது. அதன்பின் ஹனி மூனுக்காக அவர் தனது மனைவியோடு பிரான்ஸ், கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு சென்று இருக்கிறார். அதன்பின் மார்ச் 7ம் தேதி மும்பை வந்துள்ளார். மும்பையில் இருந்து பின் மீண்டும் பெங்களூருக்கு வந்துள்ளார். மார்ச் 9ம் தேதி அவர் தனது பணியில் சேர்ந்து உள்ளார். அப்போதுதான் அவருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டது.

சோதனை

சோதனை

மார்ச் 10ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் அவரின் மனைவிக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வரவே அதே நாள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு செய்யப்பட்ட முதல்கட்ட சோதனையில் வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள் தெரிந்துள்ளது. இதை அந்த பெண் டெல்லியில் இருக்கும் தன் குடும்பத்திடம் கூறியுள்ளார்.

வர சொன்னார்கள்

வர சொன்னார்கள்

இதை அடுத்து அந்த பெண்ணின் அப்பா உடனே, தனது மகளை டெல்லிக்கு வர சொல்லி இருக்கிறார். உனக்கு பிரச்சனை இல்லை, மருத்துவர்கள் பொய் சொல்கிறார்கள் உடனே கிளம்பி இங்கே வா என்று கூறியுள்ளார். அன்று இரவே மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் எஸ்கேப் ஆன அந்த பெண் மும்பை சென்றுவிட்டு பின் அங்கிருந்து டெல்லிக்கு சென்று இருக்கிறார். டெல்லியில் தனது குடும்பத்தோடு தங்கி உள்ளார்.

டெல்லி குடும்பம்

டெல்லி குடும்பம்

இவர் டெல்லிக்கு தப்பித்து சென்றது அதன்பின் பெங்களூர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்துள்ளது. அவர்கள் வேகமாக அங்கிருந்து டெல்லி சென்று, அந்த பெண்ணின் வீட்டில் விசாரித்து உள்ளனர். ஆனால் மகளை வீட்டில் வைத்துக் கொண்டே, என் மகள் இங்கே இல்லை, அவர் பெங்களூர் சென்றுவிட்டார் என்று அவரின் அப்பா பொய் சொல்லி உள்ளார். அதன்பின் டெல்லி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 போலீஸ் கைது

போலீஸ் கைது

போலீசாரிடம் உதவி கேட்கப்பட்டுள்ளது. அதன்பின் போலீசார் வந்து அந்த பெண்ணின் வீட்டில் சோதனை செய்யவே , அவர் அங்கு தலைமறைவானது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து தற்போது மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அவரின் குடும்பதாரையும் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். அந்த பெண் பெங்களூரில் இருந்து மெட்ரோவில் வீட்டிற்கு சென்று, அங்கிருந்து கார் மூலம் விமான நிலையம் சென்று இருக்கிறார்.

பலர் என்ன ஆகும்

பலர் என்ன ஆகும்

பின் மும்பை சென்று, பின் டெல்லி சென்று, காரில் வீட்டிற்குசென்றுள்ளார் .இந்த பயணத்தில் அந்த பெண் பலருடன் தொடர்பு கொண்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த பெண் மூலம் பலருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஒரு படித்த பெண் கொரோனாவோடு இப்படி ஊர் சுற்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Coronavirus: A Bangalore techie's wife run away with COVID-19, Shocking.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X