பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக்டவுன் நீட்டித்தாலும் அரசு அலுவலகங்கள், மதுபான கடைகளை திறக்கலாமா? கர்நாடகா பாஜக அரசு இன்று ஆலோசனை

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் லாக்டவுன் அமலில் உள்ள நிலையிலும் அரசு அலுவலகங்கள், மதுபான கடைகள் உள்ளிட்டவற்றை திறப்பது தொடர்பாக இன்று அம்மாநில அரசு ஆலோசனை நடத்த உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு தழுவிய அளவில் 21 நாட்கள் லாக்டவுன் அமலில் உள்ளது. இந்த லாக்டவுன் நாளை முடிவடைய உள்ளது. இது மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பது இன்று அல்லது நாளை தெரிந்துவிடும்.

Coronavirus lockdown: Karnataka to discuss reopening of govt offices, liquor shops

இந்த நிலையில் கர்நாடகாவில் மதுபான கடைகளை திறக்க வேண்டும் என்று அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை அளித்திருந்தனர். சில கட்டுப்பாடுகளுடன் மதுபான கடைகளை திறக்கலாம் என்கிறது அந்த பரிந்துரை.

மதுபானம் கிடைக்காத விரக்தியில் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாலும் தற்கொலை செய்து வருவதாலும் இந்த பரிந்துரையை அதிகாரிகள் அளித்துள்ளனர். இதேபோல் அரசு அலுவலகங்களை குறிப்பிட்ட அளவு திறக்கலாம் என்கிற பரிந்துரையும் அரசுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 59 இந்தியர்கள் உட்பட 233 பேருக்கு கொரோனா பாதிப்பு சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 59 இந்தியர்கள் உட்பட 233 பேருக்கு கொரோனா பாதிப்பு

லாக்டவுன் நீட்டிக்கப்பட்டாலும் இவற்றை திறப்பது தொடர்பாக இன்று கர்நாடகா மாநில அரசு ஆலோசனை நடத்தி முடிவை அறிவிக்க உள்ளது. ஏற்கனவே ஹரியானாவில் மதுபான தொழிற்சாலைகளை திறந்து மதுபான உற்பத்தியை தொடங்க அம்மாநில அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Karnakata's High level meetings will be convened to discuss the easing of restrictions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X