பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெள்ளத்தால் பகல் கொள்ளை.. பெங்களூரில் ஹோட்டல் ரூம் கட்டணம் தாறுமாறாக உயர்வு

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பலர் அங்கு வீடுகளில் இருந்து வெளியேறி ஹோட்டல்களில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெங்களூரில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூரில் பெய்து வரும் மழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று அலுவலகம் சென்ற பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர்.

முக்கியமாக இரவு 3 மணி நேரத்தில் மட்டும் பெங்களூரில் 125 மிமீ அளவிற்கு மழை பெய்தது. இதனால் மழை பெய்த சில நிமிடங்களில் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. கடந்த ஒரு வாரமாக பெங்களூரில் பல பகுதிகளில் இதனால் வெள்ளம் ஏற்பட்டது, அதேபோல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

ஊதியே பெருசாக்குறாங்க! நம்பாதீங்க.. பெங்களூரில் சில இடத்தில் தான் வெள்ளப்பாதிப்பு.. கிளம்பிய வாதம்ஊதியே பெருசாக்குறாங்க! நம்பாதீங்க.. பெங்களூரில் சில இடத்தில் தான் வெள்ளப்பாதிப்பு.. கிளம்பிய வாதம்

தண்ணீர்

தண்ணீர்

இந்த மழை காரணமாக பெங்களூரில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. அவுட்டர் ரிங் ரோட்டில் வீடு வாங்கிய பலர் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடுமையாக கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த பகுதிகளில் பல இடங்களில் ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இங்குதான் வீடுகளுக்குள் நீர் புகுந்து, இரண்டு நாட்களாக மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

வெள்ளம் வடியவில்லை

வெள்ளம் வடியவில்லை

இன்னும் பல வீடுகளில் தண்ணீர் இறங்கவில்லை. இந்த வெள்ளம் காரணமாக பல கோடி மதிப்பிற்கு வீடுகளை வாங்கிய மக்கள் கூட வீடுகளில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் வெளியேறாத காரணத்தால் மக்கள் பலர் சொந்த வீடுகளை விட்டு படகுகளில் வெளியேறி வருகிறார்கள். இவர்கள் பணக்காரர்கள் என்பதால் அரசு முகாம்களில் தங்காமல். தனியாக ஹோட்டல் அறைகளில் தங்கி வருகின்றனர்.

வீடுகள்

வீடுகள்

இதன் காரணமாக பெங்களூரில் தற்போது ஹோட்டல் அறைகளின் விலை அதிகரித்து உள்ளது. மக்கள் பலர் ஹோட்டல்களில் தற்காலிகமாக தங்குவதால் இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓயோ நிறுவன ஊழியர் ஒருவர் பிஸ்னஸ் ஸ்டான்டர்ட் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பெங்களூரில் தற்போது ஓயோ ரூம்களில் அதிக பேர் புக் செய்து வருகிறார்கள். முக்கியமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து இருக்கிறோம்.

ஹோட்டல்கள்

ஹோட்டல்கள்

இவர்கள் எளிதாக தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து உள்ளோம். பெரும்பாலான ரூம்கள் ரூபாய் 1000ல் இருந்து கிடைக்கிறது. அருகில் இருக்கும் 'Nearby stays' என்ற ஆப்ஷனை பயன்படுத்தி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு அருகில் இருக்கும் இடங்களிலேயே தங்கிக்கொள்ள முடியும் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பலர் இந்த ஹோட்டல் அறைகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

ரூம் இல்லை

ரூம் இல்லை

ஓயோ அல்லாத மற்ற ஹோட்டல்களில் விலை அதிக அளவில் உயர்ந்து உள்ளது. லீலா பேலஸ் ஹோட்டலில் அதிக டிமாண்ட் காரணமாக ஒரு இரவிற்கு இரட்டை பெட் உள்ள ரூம் ரூபாய் 15,750 + வரி என்று கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது. Ibis Bangalore City Centre ஹோட்டலில் ஏற்கனவே 98 சதவிகித ரூம்கள் புக் ஆகிவிட்டன. இங்கு ஒரு இரவிற்கு கட்டணம் டூபாய் 6800 + வரி என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விலை உயர்ந்தது

விலை உயர்ந்தது


Radisson Blu Atria ஹோட்டலில் கட்டணம் ரூபாய் 11,100 + வரி என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் பெரும்பாலான ஹோட்டல்களில் இயல்பை விட கட்டணம் 20 - 30 சதவிகிதம் அதிகமாக உள்ளது. மக்களின் தேவை அதிகம் உள்ளது. அதனால் தானாக ரூம் விலை உயரும். பெரும்பாலான ரூம்கள் புக் ஆகிவிட்டதால் புதிதாக ரூம் கேட்கும் நபர்கள், வெளியூர் பயணிகளுக்கு ரூம் கொடுக்க முடிவது இல்லை என்று ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

English summary
Demand for hotel increases as people leave homes due to Heavy flood in Bangalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X