"போய் எம்பி வேலையை பாரு".. ஆஆ.. கம்பீரிடம் கோலி அப்படி சொன்னாரா? களத்தில் நடந்தது என்ன? பின்னணி
பெங்களூர்: நேற்று பெங்களூர் - லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் கோலி - கம்பீர் இடையே மோதல் ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று பெங்களூர் - லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் இறங்கிய பெங்களூர் அணி 20 இவரில் 126-9 ரன்கள் மட்டுமே எடுத்தது. டு பிளசிஸ் 44, கோலி 31 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. க்ரிஷ்ணப்பா கவுதம் மட்டும் அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார். அமித் மிஸ்ரா 19 ரன்கள் எடுத்தார். இதனால் லக்னோ அணி 19.5 ஓவரில் 108-10 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
சண்டை: இந்த போட்டியில் லக்னோ வீரர் நவீன் உல் ஹக் 18.4 ஓவரில் அவுட்டானார். அப்போது கோலிக்கும் இவருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கடுமையான வாக்குவாதம் ஆனது. இது இரண்டு தரப்பிற்கும் இடையிலான மோதலை பெரிதாக்கியது.
இதையடுத்து மேட்ச் முடிந்து லக்னோ வீரர் கைலி மேயர்ஸ் சகஜமாக கோலியுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது குழந்தை போல செயல்பட்ட கம்பீர் வந்து அப்படியே கைலியை அழைத்து சென்றார். நீ எப்படி கோலி கூட பேசலாம் என்பது போல அழைத்து சென்றார்.
ஒரு எம்பியாக இருந்து கொண்டு அவர் மைதானத்தில் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனங்களை சந்தித்தது.

கம்பீர் இப்படி நடந்து கொண்டதை கோலி அங்கேயே விமர்சனம் செய்தார். இதை பார்த்து.. என்ன என்ன என்பது போல.. தடுப்பதற்கு ஆள் இருக்கும் தைரியத்தில் கம்பீரும் முரண்டு பிடித்துக்கொண்டு முன்னேறி சென்றார்.
கோலி பயமின்றி அவர் முகத்திற்கு நேராக சென்று அவர் செய்தது தவறு என்று கூறி அவரை கண்டித்து பேசினார்.
என்ன பேசினார்கள்? இந்த நிலையில் கம்பீர் கோலியிடம்.. அடுத்த மேட்ச் நீ ஆட முடியாது. மைதானத்திற்குள் கால் எடுத்து வைக்க முடியாது என்று கூறியதாக சில நெட்டிசன்கள் போஸ்ட் செய்து வருகின்றனர்.
இதற்கு கோலி அளித்த பதிலில், ஒன்று அரசியலில் இருந்து எம்பி பதவியை சரியாக செய்யுங்கள் அல்லது பதவியை விட்டுவிட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்துங்கள். உங்களை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்த மக்களுக்காக ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள், என்று கூறியதாக சில நெட்டிசன்கள் போஸ்ட் செய்து வருகின்றனர்.

உண்மை என்ன? ஆனால் உண்மையில் இவர் இருவரும் இது போன்ற வாக்குவாதம் எதையும் செய்யவில்லை.
நேற்று உண்மையில் நடந்த விஷயங்கள் பின்வருமாறு..
கோலியை சந்தித்து மையர்ஸ் கிரிக்கெட் பற்றி பேசினார். இருவரும் 2 விளையாட்டு வீரர்களைப் போல சாதாரணமாக பேசினர்.
கம்பீர் வந்து கைலி மையர்சை அழைத்து சென்றார்.
கோலி கோபமாக.. என்ன நடத்தை இது என்று கேட்டுள்ளார்.
அதற்கு கம்பீர்.. நீ முதலில் கொஞ்சம் நடத்தையை கற்றுக்கொள் என்று கூறி உள்ளார்.
இதற்கு கோலி கோபமாக பதிலடி கொடுத்துள்ளார்.
கம்பீர் வந்து கைலி மையர்சை அழைத்து சென்றதுதான் இங்கே மிகப்பெரிய தவறு. இதை தொடர்ந்தே சண்டை பெரிதானது. மற்றபடி கோலி கம்பீரின் எம்பி பதவி பற்றி எல்லாம் பேசவே இல்லை.
பின்னணி மோதல்: இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே கோலி தீவிரமாக, ஆக்ரோஷமாக இருந்தது. முன்னதாக க்ரூனால் பாண்டியா அவுட்டான போது கோலி முதலில் வாயில் விரல் வைத்து ஷூ என்று சொல்வது போல காட்டிவிட்டு.. பின்னர் அப்படி செய்ய கூடாது என்று சைகை செய்து ஹார்ட் காட்டினார்.
முன்னதாக பெங்களூர் - லக்னோ மேட்சில்.. லக்னோ வென்ற போது பெங்களூர் ரசிகர்களை பார்த்து ஷூ என்று எம்பி கவுதம் கம்பீர் மிரட்டினார். அவர் லக்னோ அணியின் ஆலோசகராக இருக்கிறார். ஒரு எம்பி கிரிக்கெட் ரசிகர்களை பார்த்து இப்படி சொன்னது பெரிய சர்ச்சையானது.
இதற்கு பதிலடி தரும் விதமாகவே க்ரூனால் பாண்டியா அவுட்டான போது கோலி முதலில் வாயில் விரல் வைத்து ஷூ என்று சொல்வது போல காட்டிவிட்டு.. பின்னர் அப்படி செய்ய கூடாது என்று சைகை செய்து ஹார்ட் காட்டினார். கம்பீரின் ஆணவத்திற்கு கோலி அங்கே பாடம் எடுத்தார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications