‛இவர் ரூபாவின் கணவர்’.. ரூ.4.8 கோடியை விடுவிக்காமல் பாஜக வேட்பாளரை சிக்க வைத்த ஐஏஎஸ் யார் தெரியுமா?
பெங்களூர்: லோக்சபா தேர்தலின்போது சிக்கிய ரூ.4.8 கோடியை விடுவிக்க கூறியதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, பாஜக வேட்பாளர் சுதாகர் மீது வழக்கப்பதிய நடவடிக்கை எடுத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி மனீஷ் மவுத்கில்லின் பின்னணி குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதாவது சசிகலாவிடம் ரூ.1 கோடி வாங்கி சிறையில் சொகுசு வசதி செய்து கொடுத்ததாக கூறி பரபரப்பை கிளப்பிய ஐபிஎஸ் அதிகாரியின் ரூபாவின் கணவர் என்பது உங்களுக்கு தெரியுமா?.
கர்நாடகாவில் 2 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 28 தொகுதிகள் உள்ள நிலையில் ஏப்ரல் 26ல் 14 தொகுதிகளுக்கும், மே 7 ம் தேதி 14 தொகுதிகளுக்கம் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி கர்நாடகாவில் நேற்று முன்தினம் முதற்கட்டமாக 14 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தல் நடந்த சிக்பள்ளாப்பூர் தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் சுதாகர் என்பவர் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.
இந்நிலையில் தான் தேர்தலுக்கு முந்தைய தினமான 25ம் தேதி பறக்கும் படையினர் சிக்கபள்ளாப்பூர் தொகுதிக்குட்பட்ட மாதவரா கிராமத்தில் ரெய்டு நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்ட ரூ.4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி பறக்கும் படையினர், வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே தான் சிக்கபள்ளாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் சுதாகரிடம் இருந்து ஐஏஎஸ் அதிகாரியும், தேர்தல் நடத்தை அதிகாரியுமான முனீஷ் மவுத்கில்லுக்கு வாட்ஸ்அப்பல் கால் சென்றது. மேலும் 3 மெசேஜ் அனுப்பினார். சிக்கிய ரூ.4.8 கோடியை விட்டு விடும்படியும், அதற்கு நன்றி உள்ளவனாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் முனீஷ் மவுத்கில் உடன்படவில்லை.
அதேவேளையில் அவருக்கு வந்த வாட்ஸ்அப் கால் மற்றும் மெசேஜ் வந்த எண்ணை வைத்து சிக்கபள்ளாப்பூர் தொகுதியில் வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் செல்போன் எண்ணுடன் ஒப்பிட்டு பார்த்தது. அப்போது சுதாகரின் செல்போன் என்பது உறுதியானது. இதையடுத்து அவரது அறிவுரையுன்படி எஸ்எஸ்டி குழுவின் தஸ்ரத் வி கும்பார் சார்பில் மாதநாயக்கனஹள்ளி போலீசில் புகாரளிக்கப்பட்டது.
அந்த புகாரை தொடர்ந்து பாஜக வேட்பாளர் சுதாகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 171இ (லஞ்சம்), 171எஃப் (தேர்தலில் செல்வாக்கை பயன்படுத்துதல்), 171பி (தேர்தலுக்கு லஞ்சம் கொடுத்தல்) உள்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தான் பாஜக வேட்பாளர் சுதாகருக்கு உடன்படாமல் லஞ்சம் வாங்க மறுத்த அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வைத்த முனீஷ் மவுத்கில் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது முனீஷ் மவுத்கில், கர்நாடகாவில் பிரபலமாக உள்ள ஐபிஎஸ் அதிகாரி ரூபாவின் கணவர் ஆவார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்தபோது அவருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணாவுக்கு ரூ.1 கோடி கைமாறப்பட்டதாக இந்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா தான் புகாரளித்தார். அந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் நேர்மையான அதிகாரி என பெயர் பெற்ற ரூபாவின் கணவர் தான் இந்த முனீஷ் மவுத்கில். இவரும் நேர்மையான அதிகாரியாக அறியப்படுகிறார். முனீஷ் மவுத்கில் ஐஏஎஸ் மற்றும் ரூபா ஐபிஎஸ் ஆகியோர் கர்நாடகாவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 2 பேருக்கும் கடந்த 2003ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications