தசரா விழாவில் மிரண்டு ஓடிய யானை! நடு வழியில் நிறுத்தப்பட்ட ஊர்வலம்.. பதைபதைத்த கர்நாடகா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவின் சிவமோகாவில் நடைபெற்ற தசரா ஜம்போ சவாரி ஊர்வலத்தில் 650 கிலோ எடை கொண்ட வெள்ளி அம்பாரியை சுமந்து வந்த யானை திடீரென தறிகெட்டு ஓடியது. இதில் வெள்ளி அம்பாரி கீழே விழுந்தது. ஊர்வலம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சோமன்னா யானை மிரண்டு ஓடியதால் ஊர்வலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பக்தர்களும் தறிகெட்டு ஓடியதால் அங்கு பரபரப்பான சூழல் உண்டானது. இதையடுத்து மிரண்டு ஓடிய யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் தசரா விழாவையொட்டி ஜம்போ சவாரி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் 650 கிலோ எடையுள்ள வெள்ளி அம்பாரியைச் சோமன்னா என்ற யானை சுமந்து வந்தது. ஏராளமான பக்தர்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

Elephant carrying 650 kg silver howdah ran amok during the Dasara procession in Karnataka

மிரண்டு ஓடிய யானை

சிவப்ப நாயக்கா அரண்மனையில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சோமன்னா யானை மிரண்டு ஓடியது. கோட்டை சாலையில் யானை சென்றுகொண்டிருந்தபோது, திடீரென திசைமாறி பின்னோக்கி ஓடியது. யானை மிரண்டு ஓடியதால், யானையின் மீதிருந்த வெள்ளி அம்பாரி நழுவி கீழே விழுந்தது. இதில் அம்பாரி லேசாக சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

யானை திடீரென கட்டுப்பாட்டை மீறி ஓடியதால் அங்கிருந்த மக்கள் பதறியடித்தனர். யானை எதுவும் தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் ஓட்டம் பிடித்தனர். யானை மிரண்டு ஓடியதில் மூன்று பைக்குகள், இரண்டு கார்கள் சேதம் அடைந்தன. நல்வாய்ப்பாக இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

மயக்க ஊசி செலுத்தி

யானை மிரண்டு ஓடிய தகவல் கிடைத்ததும் உடனடியாக போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் அங்கிருந்த மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தினர். கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதையடுத்து கட்டுக்குள் வந்த யானையை கோடே சிதாராமஞ்சேனாயா கோவிலில் வனத்துறையின்ர் கட்டிப்போட்டனர். யானை தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திருமிபி வருவதாக கூறப்படுகிறது.

கர்நாடக அமைச்சர் பேட்டி

கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்திய நிலையில், மாநில வனத்துறை அமைச்சர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், "ஜம்போ சவாரியில் ஈடுபடும் யானைகள் குறைந்தது 20 நாட்கள் முதல் ஒரு மாதம் பயிற்சி பெற்று இருக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும். இதனை வனத்துறை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

மேலும், சம்பவம் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்த ராமலிங்க ரெட்டி, இந்த சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அங்கு, விஜயதசமி நாளன்று நடைபெறும் 'ஜம்பூ சவாரி' ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலத்தில் யானையின் மீது தங்க அம்பாரி சுமந்து செல்லப்படுவது வழக்கம். அப்படித்தான் இந்த ஊர்வலம் இன்று தொடங்கிய போது யானை மிரண்டு ஓடி இந்த சம்பவம் அரங்கேறிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+