கர்நாடகாவில் 16 வாரிசுகள்.. பாஜகவுக்கு குடும்ப அரசியல் பற்றி பேச தகுதி இருக்கா? குமாரசாமி பதிலடி
பெங்களூரு: கர்நாடக பாஜகவில் உள்ள குடும்ப அரசியல் பிரமுகர்கள் பட்டியலை முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி வெளியிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் காங்கிரஸ், திமுக, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, சிவசேனா என பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளின் வாரிசுகளும், ஆட்சியில் இருந்த கட்சிகளின் வாரிசுகளும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை எதிர்ப்பதாக பாஜக தரப்பில் எப்போதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

அமித் ஷா பேச்சு
முக்கியமாக வாரிசு அரசியலுக்கு எதிராக கட்சி பாஜக என்றும், பாஜகவில் குடும்ப அரசியல் இல்லை என்றும் கூறி எதிர்க்கட்சிகளை விமர்சிப்பர். அண்மையில் தெலங்கானாவில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய அமித் ஷா, இந்தியாவில் குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பேசியிருந்தார்.

கொதித்த குமாரசாமி
இதனிடையே கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியை, லக்கி சிஎம் என்றும், அக்கட்சியை அப்பா - மகன் கட்சி என்று பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ட்விட்டர் பக்கத்தில் குமாரசாமி நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கர்நாடக பாஜகவில் உள்ள குடும்ப வாரிசுகளையும் பட்டியலிட்டுள்ளார். அந்தப் பதிவில், நான் அதிர்ஷ்டத்தின் மூலமாக முதலமைச்சர் ஆனேன் என்று நீங்கள் கூறுகிறீர்கள். தற்போது முதலமைச்சராக உள்ள பசவராஜ் பொம்மை மக்கள் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டாரா? என்று கேள்வி எழுப்பினார்

பட்டியல் வெளியீடு
தொடர்ந்து மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி குடும்ப அரசியல் செய்வதாக குற்றம்சாட்டுகின்றனர். ஏன் பாஜகவில் குடும்ப அரசியல் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். இதோடு, கர்நாடக பாஜகவில் இருக்கும் குடும்ப வாரிசுகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார். அதில், எடியூரப்பா & சன்ஸ், ரவி சுப்ரமணி-தேஜஸ்வி சூர்யா, அசோக-ரவி, வி.சோமன்னா-அருண் சோமன்னா, அரவிந்த் லிம்பாவலி-ரகு, எஸ்.ஆர்.விஸ்வநாத்-வாணி விஸ்வநாத், ஜகதீஷ் ஷெட்டர்-பிரதீப் ஷெட்டர், முருகேஷ் நிராணி-ஹனுமத் நிராணி, ஜி.எஸ்.பசவராஜு-ஜோதி கணேஷ், ஜார்கிஹோலி குடும்பம், கட்டி குடும்பம், ஜோல்லே குடும்பம், அங்காடி குடும்பம், உதாசி குடும்பம், ஸ்ரீராமுலு குடும்பம், ரெட்டி சகோதரர்கள் என்று 16 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

குமாரசாமி கேள்வி
தொடர்ந்து, உங்கள் குடும்ப ஆட்சி பட்டியல் இன்னும் நிறைய இருக்கிறது. பாஜக என்பதே குடும்ப அரசியலின் சங்கிலித் தொடர் என்பதை நான் அறிவேன். கர்நாடகாவில் மட்டுமே இந்த பட்டியல். பாஜகவில் உள்ள நாடு தழுவிய வாரிசு அரசியலை நான் அம்பலப்படுத்தட்டுமா? என்று விமர்சித்துள்ளார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications