ஆபாச பட தளத்தில் இணைந்த பிரபல ஆர்சிபி வீரர்! என்ன செய்ய போகிறார்.. அவரே சொன்ன மேட்டரை கேளுங்க
பெங்களூர்: ஐபிஎல் தொடரில் உலகெங்கும் ரசிகர்களைக் கொண்ட ஒரு அணி என்றால் அது ஆர்சிபி. இதற்கிடையே ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஒருவர் பிரபல ஆபாச படத்தளத்தில் இணைந்துள்ளார். அவர் எதற்காக அந்த தளத்தில் இணைந்தார். இதற்கான காரணம் பின்னணி.. குறித்து அவரே விளக்கியுள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த 17 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாகப் பெங்களூர் அணி இந்தாண்டு சாம்பியன் பட்டம் வென்றது. இது பெங்களூர் அணி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது. இதற்கிடையே ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய பிரபல வீரர் ஒருவர் ஆபாசப் படத் தளத்தில் இணைந்துள்ளாராம்.

அதாவது இங்கிலாந்து வீரர் டைமல் மில்ஸ் பிரபல தளமான ஒன்லி பேன்ஸ் தளத்தில் இணைந்துள்ளார். இவர் கடந்த 2023ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். அதன் பிறகு அவருக்கு இங்கிலாந்து அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் தான் ஒன்லி பேன்ஸ் தளத்தில் சேர்ந்திருக்கிறார்.
ஒன்லி பேன்ஸ் தளம்
இந்த ஒன்லி பேன்ஸ் தளம் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரபலங்கள் அனைவரும் நேரடியாக தங்கள் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதை உறுதி செய்வதே இந்த தளத்தின் முதல் நோக்கம். ஒவ்வொரு பிரபலத்தையும் பாலோ செய்ய அந்த நபரின் கணக்கிற்குத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும். தொடக்கத்தில் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் இது உருவாக்கப்பட்டாலும் கூட ஒரு கட்டத்தில் ஆபாசப் பட நடிகர், நடிகைகளே இதில் அதிகம் சேர்ந்தனர்.
இதனால் உலகெங்கும் ஆபாசப் பட தளமாகவே இந்த ஒன்லி பேன்ஸ் கருதப்படுகிறது. இந்த தளத்தில் தான் இப்போது ஆர்சிபி வீரர் டைமல் மில்ஸ் சேர்ந்துள்ளார். ஒன்லி பேன்ஸ் தளத்தில் இணைந்த முதல் கிரிக்கெட் வீரர் இவராவார். டைமல் மில்ஸின் இந்த நடவடிக்கை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த டைமல் மில்ஸ்
2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் மில்ஸ் அறிமுகமானார். அவரது 9 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் காயங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் இந்த காலகட்டத்தில் வெறும் 16 டி20 சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே களமிறங்க முடிந்தது. 2017ல் இவரை ஆர்சிபி அணி நிர்வாகம் ரூ.12 கோடி கொடுத்து எடுத்தது. இருப்பினும், ஓராண்டு மட்டுமே அவர் ஆர்சிபி அணியில் விளையாடினார். அதன் பிறகு விடுவிக்கப்பட்ட அவர், 2022ல் மும்பை அணிக்காக விளையாடினார். தற்போது இங்கிலாந்து 'தி ஹன்ட்ரட்' தொடரில் சதர்ன் பிரேவ் அணிக்காக இவர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
எதற்காகச் சேர்ந்தார்
இந்த டைமல் மில்ஸ் தான் இப்போது ஒன்லி பேன்ஸ் தளத்தில் சேர்ந்துள்ளார். இதில் பெரும்பாலும் ஆபாசப் படங்கள் தான் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளும் மில்ஸ், இருப்பினும் தனது பக்கம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனச் சொல்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் மில்ஸ், "அந்த தளம் ஆபாசப் படங்களுக்குப் பிரபலமானது என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் நான் செய்யப்போவது அது இல்லை. 1000% தெளிவாகச் சொல்கிறேன், எனது பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் எதுவும் இருக்காது.
உற்சாகமாக இருக்கிறதாம்
இது முழுக்க முழுக்க கிரிக்கெட் சார்ந்தது. எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இந்த தளத்தில் நாம் நேரடியாக ரசிகர்கள் உடனும் மக்கள் உடனும் தொடர்பில் இருக்கலாம். மீடியாவில் பேசுவதற்கும் இதில் பேசுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அது போகத் போக தெரியும். நான் சிந்திப்பதைப் பேசவும், கிரிக்கெட் வீரரின் வாழ்வைப் பதிவு செய்யவும் இந்த தளத்தைப் பயன்படுத்தப் போகிறேன்" என்றார்.
ஒன்லி பேன்ஸ் தளத்தில் பெரும்பாலும் கட்டணம் செலுத்தினால் மட்டுமே வீடியோ பார்க்க முடியும். அதேநேரம் தனது கணக்கு இலவசமாகவே இருக்கும் என்றும் சில வீடியோக்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தும்படி இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
-
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications