பெண்களிடம் சில்மிஷம்.. வீடியோ வெளியானதால் ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்! கர்நாடக அரசு அதிரடி உத்தரவு
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி ராமச்சந்திர ராவை போலீஸ் அலுவலகத்திலேயே சில பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நிலையில், ராமச்சந்திர ராவை சஸ்பெண்ட் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு அரசியல்வாதிகள் மீதும் பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. அது அங்கு அரசியலில் பெரும் புயலையும் கிளப்பி இருந்தது. இதற்கிடையே இப்போது அங்கு போலீஸ் அதிகாரி ஒருவரே இதுபோன்ற விஷயத்தில் சிக்கியிருக்கிறார்.

ஐபிஎஸ் அதிகாரி
கர்நாடகாவில் டிஜிபி அந்தஸ்து ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், தனது அலுவலகத்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகச் சொல்லி வீடியோ வெளியாகியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கர்நாடகாவில் கடந்த காலங்களில் அரசியல் தலைவர்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், இப்போது போலீஸ் உயர் அதிகாரி மீதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது..
சிவில் உரிமை அமலாக்க இயக்குநரகத்தின் டிஜிபி டாக்டர் ராமச்சந்திர ராவ் என்பவர் மீதே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவரது அலுவலகத்தில் தான் இந்த வீடியோ ரகசியமாகப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பணி நேரத்தில் டாக்டர் ராவ் பெண்களுடன் நெருக்கமாகப் பழகிய வீடியோக்கள் தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பெலகாவியில் இருந்தபோது இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஷாக் வீடியோ
இந்த வீடியோ பல்வேறு நாட்களில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. தனது அலுவலகத்திற்கு வந்த பெண்களுடன், அதிகாரி ட்யூட்டியில் இருக்கும்போதே இதுபோல அத்துமீறி நடந்து கொள்கிறார். அந்தப் பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு இருக்கிறார்.. அதேநேரம் அந்தப் பெண்களை ராவ் கட்டாயப்படுத்தவில்லை என்றும் பெண்கள் யாரும் புகாரளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், போலீஸ் உடையில் இருக்கும்போது, போலீஸ் அலுவலகத்திலேயே இதுபோல நடந்து கொள்வது கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.
கடும் விமர்சனம்
மூத்த போலீஸ் அதிகாரியாக இருக்கும் அவரிடம் கண்ணியம், ஒழுக்கம் இருக்க வேண்டும்.. மற்றவர்களுக்கு முன்னுதாரணமான இருக்க வேண்டும். ஆனால், அவரே எல்லை மீறி நடந்து கொண்டால் என்ன செய்வது என்று பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசு அலுவலகத்தில், பணி நேரத்தில் இத்தகைய செயல்கள் அவர் ஈடுபட்டுள்ளதே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒட்டுமொத்த போலீஸ் துறைக்கும் கலங்கத்தை ஏற்படுத்துவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் இதனால் அவர் கடும் கோபத்தில் இருப்பதாகவும் முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வீடியோ வெளியான நிலையில், ராமச்சந்திர ராவை சஸ்பெண்ட் செய்து கர்நாடக ரசு உத்தரவிட்டுள்ளது. வீடியோக்கள் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மறுப்பு
அதேநேரம் சம்பந்தப்பட்ட அந்த போலீஸ் அதிகாரி தன் மீதான குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் வேண்டும் என்றே தன் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இது தொடர்பாக இந்தியா டுடேவுக்கு அளித்த விளக்கத்தில், "8 ஆண்டுகளுக்கு முன்புதான் நான் பெலகாவியில் இருந்தேன்.
வழக்கறிஞருடன் பேசி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இது முழுமையாகப் புனையப்பட்ட வழக்கு.. முற்றிலும் பொய்யானது.. இது குறித்து நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications