‛இது இந்துக்களின் நாடு.. பாகிஸ்தானுக்கு போங்க’.. முஸ்லிம் மாணவர்களை திட்டிய ஆசிரியை டிரான்ஸ்ஃபர்!
பெங்களூர்: கர்நாடகாவில் உருது பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை முஸ்லிம் மாணவர்களை பார்த்து ‛‛இது இந்துக்களின் நாடு. பாகிஸ்தானுக்கு போங்க" என ஆக்ரோஷமாக திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள தனியார் பள்ளியில் முஸ்லிம் மாணவனை பிற மாணவர்களை வைத்து ஆசிரியை திருப்தா தியாகி அடிக்க கூறிய சம்பவம் வீடியோவாக வெளியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையே தான் திருப்தா தியாகி தான் மாற்றுத்திறனாளி என்பதால் பிற மாணவர்களை வைத்து அந்த மாணவனின் கன்னத்தில் அறைய கூறினேன். மதத்தின் அடிப்படையில் எதையும் செய்யவில்லை என்றார். இருப்பினும் இந்த சம்பவம் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது. ராகுல் காந்தி உள்பட பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இத்தகைய சூழலில் தான் கர்நாடகாவில் தற்போது இன்னொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது கர்நாடகா உருது கல்வி நிறுவனங்களில் கீழ் சிவமொக்காவில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் பாடம் நடத்தும் வேளையில் சண்டையிட்டுள்ளனர்.
இந்த வேளையில் பள்ளியில் கன்னட பாடம் நடத்தும் ஆசிரியை அவர்களை திட்டியுள்ளார். அப்போது அவர், ‛‛இது இந்துக்களின் நாடு. 2 பேரும் பாகிஸ்தான் செல்லுங்கள்'' என ஆக்ரோஷமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நடந்த சம்பவத்தை மாணவர்கள் தங்களின் பெற்றோரிடம் கூறியுள்னளர். இதையடுத்து அவர்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தனர்.
இந்த புகாரை தொடர்ந்து கன்னட ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 26 ஆண்டுகளாக ஆசிரியையாக இருக்கும் நிலையில் கடந்த 8 ஆண்டுக்களாக ஒரே பள்ளியில் பணியாற்றி வந்தார். தற்போது அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
இதுபற்றி கல்வித்துறை அதிகாரி நாகராஜ் கூறுகையில், ‛‛சம்பந்தப்பட்ட ஆசிரியை பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். துறை ரீதியான விசாணை நடத்தப்பட உள்ளது. அதன்பிறகு கிடைக்கும் அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது'' என தெரிவித்தார்.
-
பெங்களூரில் நடக்கும் கொடுமை..! திடீர் திடீரென வீட்டை காலி செய்யச் சொல்லும் வீட்டு ஓனர்கள்.. ஏன்? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications