தங்க கடத்தல் ராணி நடிகை ரன்யா ராவ் ஷாக் புகார்-விசாரணையில் "வேற மாதிரி" தாக்குதல்- பட்டினி சித்ரவதை!
பெங்களூர்: தங்கக் கடத்தல் ராணியான தமிழ் நடிகை ரன்யா ராவ், தம்மை வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணையின் போது முகத்திலேயே சரமாரியாக தாக்கி காயப்படுத்தினர்; உணவு தராமல் பட்டினி போட்டு சித்ரவதை செய்தனர் என அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
வாகா தமிழ் படத்தில் அறிமுகமானவர் கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை ரன்யா ராவ். அண்மையில் 12 கிலோ தங்க கட்டிகளை துபாயில் இருந்து கடத்தி வந்த போது பெங்களூர் விமான நிலையத்தில் வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளிடம் சிக்கினார் ரன்யா ராவ்.

52 முறை துபாய் பயணமும் தங்க கடத்தலும்
நடிகை ரன்யா ராவ், கடந்த 15 மாதங்களில் 52 முறை துபாய் பயணம் மேற்கொண்டிருக்கிறார். துபாயில் இருந்து திரும்பும் போது ஒவ்வொரு முறையும் 10 முதல் 12 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்துள்ளார். துபாய் சென்று திரும்பும் ஒவ்வொரு முறையும் தங்கக் கடத்தலுக்கு என தனியாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு உடையை மட்டுமே ரன்யா ராவ் அணிந்து பயணித்துள்ளார்.
வளர்ப்புத் தந்தை டிஜிபி உடந்தை?
பெங்களூர் விமான நிலையத்தில் தொடையில் 12 கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்த நிலையில் பிடிபட்டார் ரன்யா ராவ். மேலும் ரன்யா ராவின் வளர்ப்பு தந்தை டிஜிபியாக இருப்பதால், பெங்களூர் விமான நிலைய போலீசாரே ஒவ்வொரு முறையும் ரன்யா ராவை விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பியதும் அம்பலமானது.
சிக்கும் அரசியல் பிரபலங்கள்
அத்துடன் ரன்யா ராவிடம் இருந்து தங்க கட்டிகளை பர்சேஸ் செய்த நட்சத்திர ஹோட்டல் அதிபரும் கைது செய்யப்பட்டார். இதனிடையே ரன்யா ராவின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரன்யா ராவுடன் தற்போதைய கர்நாடகா அமைச்சர்கள் 2 பேருக்கு மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பாஜக அரசு வழங்கிய நிலம்
அதேநேரத்தில் கர்நாடகாவில் கடந்த கால பாஜக ஆட்சியில்தான், ரன்யா ராவ் தொடங்கிய ஸ்டீல் நிறுவனம் ஒன்றுக்கு அரசின் 12 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரன்யா ராவ் விவகாரத்தில் பெரும் அரசியல் புள்ளிகள் பலரும் சிக்கக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகின.
டிஜிபிக்கு நெருக்கடி
இந்த நிலையில் ரன்யா ராவின் வளர்ப்புத் தந்தை டிஜிபி, தற்போது இடம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ரன்யா ராவின் தங்கக் கடத்தலுக்கு அந்த டிஜிபி எப்படி எல்லாம் உடந்தையாக இருந்தார்? அவர்தான் மூளையாக இருந்தாரா? எந்தெந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுடன் டிஜிபியும் ரன்யா ராவும் நெருக்கமாக இருந்தனர் என்றெல்லாம் கர்நாடகா மாநில அரசும் விசாரணை நடத்தி வருகின்றன.
10 முறை தாக்கி சித்திரவதை புகார்
இந்த நிலையில் வருவாய் நுண்ணறிவுப் பிரிவு உயர் அதிகாரிகளுக்கு சிறையில் இருந்தே ரன்யா ராவ் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் தம்மை விசாரித்த வருவாய் நுண்ணறிவுப் பிரிவு, தம்மை விசாரணையின் போது மிக கொடூரமாக தாக்கினர்; முகத்தில் 10 இடங்களில் காயத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர்; விசாரணை காலத்தில் உணவு கூட தராமல் பட்டினி போட்டு சித்திரவதை செய்தனர் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
-
‘பப்ஜி' கேமால் சிதைந்த குடும்பம்.. தந்தை - அக்காளை கொன்ற இளைஞர்.. தாய் உயிருக்கு போராட்டம் -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications