பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதோ பாவாடை தாவணியில் நிக்கிறது யார் தெரியுமா.. வாயை பிளக்க வைத்த பெங்களூர் மாப்பிள்ளை..!

தன் கல்யாணத்துக்கு ஹெலிகாப்டரில் மண்டபத்தில் வந்திறங்கினார் மணமகன்

Google Oneindia Tamil News

பெங்களூரு: தன் கல்யாணம் வித்தியாசமாக நடக்க ஆசைப்பட்டுள்ளார் ஒரு மாப்பிள்ளை.. இறுதியில் அது விவகாரமாக போய்விடும் நிலை உள்ளது.. அப்படிப்பட்ட செய்தி தான் இது!

கர்நாடக மாவட்டம், துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர் பலராம்... இவரது மனைவி ரமாதேவி. இவர்களது மகன் நிரூப்.. இவர் ஒரு தொழில் அதிபர். சொந்தமாக அரிசி மிஷின் வைத்து நடத்தி வருகிறார்.

நிரூப்புக்கு, பெங்களூரு தலகட்டபுரா அருகே வசிக்கும் ஐஸ்வர்யா என்ற பெண்ணை பார்த்து கல்யாணத்துக்கு பேசி முடித்தனர்.. டிசம்பர் 1-ந் தேதி அதாவது நேற்றுதான் இவர்களுக்கு கல்யாணம் செய்வது என்று 2 வீட்டிலும் பெரியவர்கள் முடிவு செய்திருந்தனர்.. அதற்கான ஏற்பாடுகளையும் இருவீட்டிலும் தடபுடலாக ஏற்பாடு செய்தனர்.

 முகூர்த்த நேரம்

முகூர்த்த நேரம்

நேற்றைய தினம் முகூர்த்த நேரம் நெருங்கியது.. மாப்பிளை மண்டபத்தில் மணமகன் அறையில் இருந்து வெளியே வருவார் என்று பார்த்தால், யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார்.. துமகூருவில் இருந்து ஸ்பெஷல் ஹெலிகாப்டராம் அது.. தன்னுடன் தன் குடும்பத்தையே தலகட்டபுராவில் உள்ள கல்யாண மண்டபத்திற்கு அழைத்து வந்திருந்தார்.

 ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர்

மண்டபத்தில் திரண்டிருந்த அனைவரும் இதனை ஆச்சரியத்துடன் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர்... கல்யாணத்துக்கு வந்தவர்களை தவிர, அந்த பகுதியில் இருந்த எல்லாருமே ஹெலிகாப்டர் சத்தத்தை கேட்டு மண்டபத்துக்கு ஓடி வந்தனர். அப்போது, மணப்பெண்ணும் அங்கு வந்தார்.. அவரது உடை பார்ப்பதற்கு பாவாடை தாவணி போலவே இருந்தது.. பூரிப்புடன் வந்திறங்கிய மாப்பிள்ளைக்கு கை கொடுத்து வரவேற்பு தந்தார்.. இதன்பிறகு தம்பதியின் கல்யாணம் கோலாகலமாக நடந்தது.

பூரிப்பு

பூரிப்பு

இதுபற்றி மாப்பிள்ளை நிரூப் சொல்லும்போது, "என் கல்யாணத்துக்கு புதுசா ஏதாவது செய்யணும்னு ஆசைப்பட்டேன்.. பெண் வீட்டிலும் இதையே தான் சொன்னார்கள்.. அதனால்தான் துமகூருவில் இருந்து தலகட்டபுராவுக்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்தேன்... என் வாழ்நாளில் மறக்க முடியாது" என்றார்.

மாஸ்க்

மாஸ்க்

இதெல்லாம் ஓகேதான்.. ஆனால் என்ன பிரச்சனை என்றால், தொற்று பரவல் காரணமாக ஆடம்பர கல்யாணத்திற்கு எல்லா இடங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது... அதிலும் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்யாணத்தை பொறுத்தவரை மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் பறந்து வந்திருக்கிறார்.. தவிர, இந்த குடும்பத்தினர் யாருமே மாஸ்க் போடவில்லை.. சோஷியல் டிஸ்டன்சும் இல்லை.. மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் பறந்து வந்த வீடியோவைவிட, இந்த வீடியோதான் அதிகமாக வைரலாகி வருகிறது.. இருந்தாலும் மணமக்களக்கு நம்முடைய வாழ்த்துக்கள்!

English summary
Groom reaches Wedding Hall in Chopper in Bangalore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X