17 வயது தான்.. பெற்ற மகளையே துடிதுடிக்க கொன்ற தந்தை.. பெங்களூரை நடுங்க வைத்த ஆணவக்கொலை.. ஷாக்
பெங்களூர்: பெங்களூரில் காதலனுடன் ஓடிப்போனதால் 17 வயது மகளை துடிதுடிக்க தந்தையை வெட்டி ஆணவக்கொலை செய்த சம்பவம் நடுங்க வைத்துள்ளது.
மைசூர் மாவட்டம் எச்டி கோட்டையை சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி சாரதா. இந்த தம்பதிக்கு 17 வயதில் மகள் இருந்தார். இந்நிலையில் தான் 17 வயது மகள் ஒருவரை காதலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை கணேஷ் மற்றும் சாரதா கண்டித்துள்ளனர். அதோடு 17 வயது சிறுமியை பெங்களூர் அருகே நாகநாதபுராவில் உள்ள மாமா வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தான் கடந்த சில நாட்களுக்கு திடீரென்று சிறுமி வீட்டில் இருந்து மாயமானார். இதையடுத்து அவர்கள் ஆங்காங்கே தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர்.
இந்த விசாரணையின்போது தான் அந்த 17 வயது சிறுமி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் இருக்கும் இடத்தை போலீசார் கண்டறிந்து சிறுமியை மீட்டனர். அதன்பிறகு போலீசார் சிறுமியை அவரது மாமா வீட்டுக்கே அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தான் நேற்று இரவு எச்டி கோட்டையில் இருந்து நாகநாதபுரத்துக்கு சிறுமியின் தந்தை கணேஷ் வந்தார். அப்போது வீட்டில் இருந்த மனைவி சாரதா மற்றும் மகள் ஆகியோருடன் சண்ட ஏற்பட்டது. இந்த வேளையில் கோபத்தின் உச்சிக்கு சென்ற கணேஷ் அரிவாளை எடுத்து பெற்ற மகள் என்று கூட பாராமல் 17 வயது சிறுமியை சரமாரியாக வெட்டினார். இதை பார்த்து தடுக்க போன சாரதா உள்பட 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
3 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி இறந்திருப்பது தெரியவந்தது. சாரதா உள்பட 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணையில் மகள் காதலனுடன் ஓடிப்போனது தொடர்பான பிரச்சனையில் தான் அவரை தந்தை கணேஷ் வெட்டிக்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுபற்றி பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications