சீக்ரெட் ஆபரேஷன்! மனைவியை பல ஆண்களுடன் பகிர்ந்த கணவன்.. பெங்களூரில் கைதானது எப்படி? பரபர வாக்குமூலம்
பெங்களூர்: பெங்களூரில் தனது மனைவியை பல ஆண்களுடன் பகிர்ந்து வந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண்ணும் இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததால் அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளாவை போலவே தற்போது பெங்களூரிலும் Wife Swap சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரை சேர்ந்த 32 வயது நிரம்பிய வினய் குமார் என்ற இளைஞர் தனது 27 வயது மனைவியை பிற ஆண்களுக்கு பகிர்ந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரை சேர்ந்த வினய் குமார் ட்விட்டரில் பொய்யான பெயரில் சில கணக்குகளை நடத்தி வந்து இருக்கிறார். அதில் தனது மனைவியுடன் உறவு கொள்ள ஆண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பெங்களூர் மனைவி
மனைவியுடன் உறவு கொள்ள விரும்பும் நபர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் என்று கூறி உள்ளார். இன்பாக்சில் தொடர்பு கொள்ளும் ஆண்களுக்கு ஒரு போன் நம்பரை கொடுத்து அவர்களை டெலிகிராமில் பேச சொல்லி இருக்கிறார். இப்படி டெலிகிராமில் மெசேஜ் செய்யும் ஆண்களுக்கு தனது மனைவியின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பி இருக்கிறார் வினய் குமார். இப்படி வரிசையாக பல ஆண்களை வினய் குமார் தொடர்பு கொண்டுள்ளார்.

பாலியல் உறவு
பின்னர் இந்த ஆண்களை தனது வீட்டிற்கு அழைத்து அவர்களிடம் குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொண்டு, தனது மனைவியுடன் பாலியல் உறவு கொள்ள அனுமதித்து இருக்கிறார். இதில் கொடுமையான விஷயம் தனது மனைவி பிற ஆண்களுடன் உறவு கொள்வதை வினய் குமார் அருகில் நின்று பார்த்து ரசித்து இருக்கிறார். இது போல பல ஆண்களை வினய் குமார் வீட்டிற்கு அழைத்து இருக்கிறார். இதையடுத்து ஒரு ட்விட்டர் யூசர் இந்த கணக்கை பெங்களூர் போலீஸ் கணக்குடன் டேக் செய்துள்ளார்.

பெங்களூர் போலீஸ்
அதன்பின் இதில் விசாரணையில் குதித்த பெங்களூர் போலீஸ் துணை கமிஷ்னர் ஸ்ரீநாத் மகாதேவ் தலைமையில் குழு அமைந்தது. அந்த குழு சித்தனா என்ற கான்ஸ்டபிளை சீக்ரெட் ஆப்ரேஷனுக்காக களமிறங்கியது. பொய்யான பெயரில் அந்த வினய் குமாருக்கு கான்ஸ்டபிள் சித்தனா மெசேஜ் அனுப்பி உள்ளார். இவரை போலீஸ் என்று தெரியாமல் குமாரும் தனது டெலிகிராம் நம்பரை கொடுத்து அங்கு மனைவியின் அந்தரங்க வீடியோக்களை பகிர்ந்து உள்ளார்.

சீக்ரெட் ஆபரேஷன்
அதோடு ஒரு தேதியை குறிப்பிட்டு சித்தனாவை வீட்டிற்கு பணத்தோடு வர சொல்லி இருக்கிறார். அதேபோல் சித்தனாவும் மப்தியில் பணத்தோடு சென்ற நிலையில், மறைந்து இருந்த போலீஸ் அங்கே ரெய்டு நடத்தி தம்பதிகள் இருவரையும் கைது செய்து உள்ளனர். இருவரும் தற்போது பெங்களூரில் போலீசார் மூலம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில் வினய் குமார் பல அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

வாக்குமூலம்
வினய் குமார் தனது வாக்குமூலத்தில், எனக்கு பாலியல் வீடியோக்கள் பார்க்கும் பழக்கம் இருந்தது. அதில் சில வீடியோக்களில் மனைவியை பகிர்வது போல எனக்கும் செய்ய ஆசை. என் மனைவியும் அதற்கு தயாராக இருந்ததால் இந்த தொழிலை தொடங்கினோம். இதற்காக பொய்யாக கணக்குகளை தொடங்கினோம். இதில் பணத்தை விட பாலியல் fantasyதான் எங்களுக்கு முக்கியமாக இருந்தது. எனது மனைவி பிற ஆண்களுடன் உறவு கொள்வதை பார்க்க எனக்கு சந்தோசமாக இருந்தது என்று வினய் குமார் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
