Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாய் பிரண்ட்கள் வாடகைக்கு..! வருகிறது புதிய செயலி.. விழுந்து அடித்துக் கொண்டு சேரும் இளைஞர்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் பிரேக்அப்பால் சோகத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் புதிய செயலியை வெளியிட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் டெக் நிறுவனங்களுக்குப் பெயர் பெற்ற இடம் என்றால அது சிலிக்கான் பள்ளத்தாக்கு தான். கூகுள் தொடங்கிப் பல புகழ்பெற்ற டெக் நிறுவனங்களும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ளன.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் எண்ணில் அடங்காத அளவுக்கு டெக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஆரம்பிக்கப்படுகிறது. இதை டெக் ஸ்டார்ட்அப்-களின் தாயகம் என்றே கூடச் சொல்லலாம்.

பெங்களூர்

பெங்களூர்

இந்தியாவில் அப்படி டெக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்குத் தாய் வீடாக இருப்பது பெங்களூர் தான். இந்தியாவில் தொடங்கப்படும் பெரும்பாலான டெக் நிறுவனங்கள் பெங்களூரில் தான் உள்ளது. நாட்டின் டாப் ஐடி நகரமாக உள்ள பெங்களூர் பப்கள், கேளிக்கை விடுதிகளுக்கும் பெயர் பெற்றவை. ஆனால் எப்போதுமே பரபரப்பாக இயங்கும் நகர வாழ்கையில் தனித்து வாழ்வது எளிதான காரியம் இல்லை.

தனிமை

தனிமை

அதற்குப் பெங்களூர் மட்டும் விதிவிலக்கு இல்லை. பெங்களூரில் தனியாக வாழ்வது என்பது அதிகம் மன அழுத்தம் தருவதாகவே இருக்கும். ஒவ்வொரு நாளும் பிஸியாக இருப்பதால் அனைத்து நகரவாசிகளைப் போலவே பெங்களூர்வாசிகளும் பரபரப்பாகவே தங்கள் வாழ்க்கையைக் கழிக்கின்றனர். என்ன தான் கேளிக்கை கொண்டாட்டம் என இருந்தாலும் கூட சில சமயங்களில் அனைவரும் தனிமையை உணரக் கூடும்.

 பாய் பிரண்ட் வாடகைக்கு

பாய் பிரண்ட் வாடகைக்கு

குறிப்பாக வார இறுதி நாட்களில் அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கும்போது, சிங்களாக இருப்பவர்கள் தனிமையில் தான் நேரத்தைக் கழிக்க வேண்டி இருக்கும். இது மன அழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும். இதைப் போக்கும் வகையில் புதிய செயலியைச் சிலர் உருவாக்கி உள்ளனர். இந்தச் செயலி மூலம் தனிமையில் இருக்கும் பெண்கள் தங்களுக்குப் பாய் பிரண்ட்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளாம். ஆமாம், அதுதான் உண்மை. பாய் பிரண்ட்களை வாடகைக்கு எடுக்கலாம்.

 புதிய செயலி

புதிய செயலி


இதற்காகப் பெங்களூரில் உள்ள சில பொறியாளர்கள் டாய்பாய் (ToyBoy) என்ற செயலியை உருவாக்கி உள்ளனர். மாடல்கள், பிரபலங்கள் தொடங்கி சாதாரண இளைஞர்கள் வரை யாரை வேண்டுமானாலும் பாய் பிரண்டாக வாடகைக்கு எடுக்கலாம். இருப்பினும், இந்தச் செயலி இதுவரை பிளே ஸ்டோரில் இல்லை. தனியாக அவர்கள் தளத்தில் இருந்து தான் இதை டவுன்லோட் செய்ய வேண்டும். அதேபோல அவர்கள் இன்ஸ்டா பக்கத்திலும் பாய் பிரண்ட்களை வாடகைக்கு எடுக்கலாம்.

 வாடகை

வாடகை

இந்த ஆப் மூலம் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு எனச் செலுத்திப் பாய் பிரண்டை வாடகைக்கு எடுக்கலாம். தற்போது இந்த செயலி மூலம் பாய் பிரண்ட்களை மட்டுமே வாடகைக்கு எடுக்க முடியும். இது தனிமையில் இருக்கும் பெண்களின் மனஅழுத்தத்தை போக்க உதவும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்போது இந்தச் செயலி குறித்த தகவல்கள் தான் இணையத்தை ஆக்கிரமித்து உள்ளது. இதில் சேர்வது எப்படி என்றும் இளைஞர்கள் இணையத்தில் ஆர்வமாகத் தேடி வருகிறார்களாம்.

 பாய் பிரண்ட் மட்டும்

பாய் பிரண்ட் மட்டும்

முன்னதாக மும்பையைச் சேர்ந்த கவுஷல் பிரகாஷ் என்ற இளைஞர் 'ரெண்ட் எ பாய் ஃப்ரெண்ட் (RABF) என்ற செயலியை உருவாக்கி இருந்தார். மனச்சோர்வு உள்ளிட்ட மனநலப் பிரச்சனைகள் உள்ள பெண்கள் தங்களுக்குப் பாய் பிரண்டை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கிள் பசங்களுக்கு கேர்ள் பிரண்ட்களை வாடகைக்கு எடுக்கும் வசதி இதில் இல்லை என உச்சு கொட்டுகிறார்கள் இளைஞர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+