வீடியோவுக்காக இப்படியா? பாறையில் இருந்து ஆற்றில் குதித்த பெண் டாக்டர்.. 3 வது நாளில் கிடைத்த உடல்
பெங்களூர்: கர்நாடகாவுக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற பெண் டாக்டர் வீடியோவுக்காக பாறையில் இருந்து துங்கபத்திரா ஆற்றில் குதித்தார். அதன்பிறகு கரை திரும்ப முடியாமல் தவித்த பெண் டாக்டர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வரும் நிலையில் 3வது நாளில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
ஹைதரபாத்தை சேர்ந்தவர் அனன்யா ராவ் (வயது 26). இவர் எம்பிபிஎஸ் படிப்பை முடித்துள்ளார். தற்போது மருத்துவ மேல்படிப்பை படித்து வரும் அவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் தான் அன்னயா ராவ் தனது நண்பர்களுடன் கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்றார். வடகர்நாடகா மாவட்டங்களில் உள்ள சுற்றுலா இடங்களை அவர்கள் சுற்றிப்பார்த்தனர்.
அதன்படி கொப்பல் மாவட்டம் சனாபூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் தங்கியிருந்தனர். கடந்த 18 ம் தேதி அந்த பகுதியில் ஓடும் துங்கப்பத்ரா ஆற்றுக்கு அவர்கள் சென்றனர். தண்ணீரை பார்த்தவுடன் அனன்யா ராவ் உற்சாகப்பட்டார். அவருக்கு நீச்சல் தெரியும் என்பதால் துங்கப்பத்ரா ஆற்றில் குளிக்க முடிவு செய்தார். மேலும் அந்த இடத்தில் பாறைகள் உள்ளன. அந்த பாறையில் இருந்து ஆற்றுக்குள் குதிக்கிறேன். வீடியோ எடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து அனன்யா ராவ் பாறை முகடில் ஏறி நின்று கீழே குதித்தார். தண்ணீரில் விழுந்த அவர் நீச்சலடித்து வெளியே வர முயன்றார். ஆனால் அவரால் தண்ணீரில் இருந்து வெளியே வரமுடியவில்லை. திடீரென்று அவர் தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து அனன்யா ராவை தேட தொடங்கினர்.
ஆனால் அந்த இடம் பாறைகள் நிறைந்த பகுதியாகும். அதேபோல் துங்கபத்ரா அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு இருந்தது. இதனால் அனன்யா ராவை தேடும் பணி சவாலானது. இதையடுத்து அணையின் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. அதன்பிறகு 3 வது நாளாக நேற்று தொடர்ந்து தேடியபோது தான் அனன்யா ராவின் உடல் மீட்கப்பட்டது. அவர் தண்ணீருக்குள் மூழ்கி இறந்ததும் உறுதியானது. இதையடுத்து அந்த இடத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி பரவி வருகிறது. அதில் அனன்யா ராவின் இறுதி காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதாவது தண்ணீரில் குதிப்பதற்கு முன்பு தனது செயலை வீடியோ பதிவு செய்ய அனன்யா ராவ் கூறியுள்ளார். அதன்படி அனன்யா ராவ் பாறை மீது ஏறி நிற்கிறார். நண்பர்கள் ஒன்.. டூ.. த்ரி சொல்கின்றனர்.
இந்த வேளையில் சற்று பயந்த அனன்யா ராவ் அதன்பிறகு யோசிக்காமல் குதிக்கிறார். தண்ணீரில் விழுந்த அவர் சிறிது தூரம் நீச்சலடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் அவரால் தொடர்ந்து நீச்சலடிக்க முடியாததால் மூழ்கி இறந்துள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications