தண்ணீர் பிரச்சனை.. பெங்களூரில் டிஷ்யூ பேப்பரால் கை, முகத்தை துடைக்கும் மக்கள்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் அதிகரித்துள்ள தண்ணீர் பஞ்சத்தால் பொதுமக்கள் ‛யூஸ் அண்ட் த்ரோ' வகையிலான பிளேட்டுகள், கப்புகளை பயன்படுத்துவதாகவும், கைகளை துடைக்க டிஷ்யூ பேப்பரை பயன்படுத்துவதாகவும் எக்ஸ் பக்கத்தில் ஒருவர் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.

பெங்களூரில் ஆண்டுதோறும் மக்கள் தொகை என்பது அதிகரித்து வருகிறது. இதனால் பெங்களூர் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் புதிதாக முளைத்து வருகின்றன. பெங்களூரை பொறுத்தமட்டில் கோடைக்காலங்களில் சில இடங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படும்.

In Bangalore Residents of Prestige Falcon city are using Wet tissues to wash their hands and face

ஆனால் இந்த ஆண்டு கோடை துவங்குவதற்கு முன்பே தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. கடந்த மாதம் பாதியில் இருந்தே பல இடங்களில் குடிநீர் வினியோகம் என்பது பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுகளில் தண்ணீருக்காக போடப்பட்டுள்ள போர்வெல்கள் வற்றி உள்ளன.

பெங்களூர் நகரை எடுத்து கொண்டால் சுமார் 30 சதவீதம் அளவிலான போர்வெல்கள் வறண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பணம் கொடுத்து டேங்கர்களில் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றர். இதனால் அவர்களுக்கு அதிக நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி டேங்கர்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளதால் குறித்த நேரத்தில் டேங்கர் தண்ணீரும் கிடைக்காத சூழல் உள்ளது.

இதனால் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த குடியிருப்போர் நலச்சங்கம் அறிவுரை வழங்கி உள்ளது. மேலும் தண்ணீரை அதிகமாக பயன்படுத்துவோரை கண்டுபிடித்து அபராதம் விதிக்கவும் ஆட்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தான் பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் ‛யூஸ் அண்ட் த்ரோ' எனும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு குப்பையில் போடும் தட்டு மற்றும் டம்ளரை பயன்படுத்துவதாக கூறி உள்ளார். அதோடு கைகளை கழுவ அதிகளவில் தண்ணீர் தேவைப்படும். ஆனால் தண்ணீர் தட்டுப்பாட்டால் கைகளை துடைக்க பொதுமக்கள் ஈரத்துணி, டிஷ்யூ பேப்பரை பயன்படுத்துவதாக கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

அதாவது கடந்த 4ம் தேதி மாலை 6.33 மணிக்கு ‛மேனேஜர் மகா' எனும் எக்ஸ் பக்கத்தில், ‛‛ப்ரெஸ்டீஜ் பால்கன் சிட்டியில் வசிக்கும் மக்கள் தூக்கி வீசக்கூடிய தட்டு மற்றும் கப்புகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். மேலும் கை, முகத்தை சுத்தம் செய்ய Wet tissues பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் நீங்கள் ஒன்றை கற்பனை செய்து பாருங்கள். பெங்களூரில் இன்னும் 1000க்கும் அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன'' என தெரிவித்துள்ளார்.

இந்த எக்ஸ் பதிவின் ஸ்கிரீன் ஷாட் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது. இருப்பினும் கூட அந்த எக்ஸ் பக்கத்தின் பதிவு பொய்யானது என ஒருவர் கூறி உள்ளார். The Saffron Guru என்ற பெயரில் எக்ஸ் பக்கத்தை பயன்படுத்தி வரும் நபர், அந்த பதிவுக்கு கமெண்ட் செய்துள்ளார். அதில், ‛‛நான் அங்கு தான் வசிக்கிறேன். இதில் உண்மையல்ல என உறுதியாக கூறுகிறேன். வாட்ஸ் அப் குழு மற்றும் பொறுப்பற்ற பத்திரிகை செய்திகளால் இதுபோன்ற செயல் தூண்டப்படுகிறது'' என்றார்.

இதன்மூலம் பெங்களூரில் தண்ணீர் பிரச்சனை என்பது அதிகரித்து பொதுமக்கள் சிரமப்பட்டாலும் கூட கை, முகத்த சுத்தம் செய்ய டிஷ்யூவை பயன்படுத்தும் நிலை அதிர்ஷ்டவசமாக பெங்களூருக்கு இன்னும் வரவில்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் தற்போதைய சூழலில் அடிப்படை தேவைகளுக்கு பணம் கொடுத்தால் தண்ணீர் கிடைக்கும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+