சித்தராமையாவை தாக்க முயற்சி? திடீரென ஆக்ரோஷமாக மேடையேறிய இளைஞரால் பரபரப்பு! என்ன நடந்தது?
பெங்களூர்: பெங்களூர் விதான சவுதாவின் முன்பு நடந்த நிகழ்ச்சியின் மேடையில் முதல்வர் சித்தராமையா அமர்ந்து இருந்தார். அப்போது திடீரென்று ஆக்ரோஷமாக பார்வையாளர் பகுதியில் இருந்து ஜம்ப் செய்து மேடையில் ஏறிய இளைஞரை அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்து இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். இந்நிலையில் தான் பெங்களூர் விதான சவுதா (கர்நாடகா சட்டசபை கட்டடம்) முன்பு இன்று ஜனநாயக நாள் கொண்டாட்டம் நடந்தது. இதற்கான நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மகாதேவப்பா மேடையில் பேசி கொண்டிருந்தார். அப்போது சித்தராமையா மேடையில் போடப்பட்டு இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தார். இந்த வேளையில் திடீரென்று மேடை முன்பு அமர்ந்திருந்த பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்து இளைஞர் ஒருவர் ஆக்ரோஷமாக மேடையை நோக்கி ஓடினார்.
மேடை அருகே சென்றதும் ஜம்ப் செய்து சித்தராமையாவை நோக்கி ஓட முயன்றார். இதை கவனித்த பாதுகாவலர்கள் உடனடியாக அந்த இளைஞரை தடுத்தனர். இதனால் அவர் மேடையில் விழுந்தார். அதன்பிறகு அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை குண்டுகட்டாக இழுத்து சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இந்த இளைஞர் யார்? அவரது பின்னணி என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை.
மேலும் அவர் மேடை ஏறியபோது பாதுகாவலர்கள் தடுத்தபோது காவி நிற ஷாலை கையில் இருந்து தூக்கி வீசினார். இதனால் அவர் பாஜக அல்லது இந்து அமைப்பை சேர்ந்தவரா? சித்தராமையாவை தாக்க மேடை ஏறினாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது ஒருபுறம் இருந்தாலும் கூட அந்த காவி ஷால் என்பது பிரமுகர்களுக்கு போர்த்தப்படும் பொன்னாடை போன்று உள்ளது. இதனால் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளரா அவர்? போலீசுக்கு பயந்து வேகமாக மேடைேயேறி ஷாலை சித்தராமையாவுக்கு அணிவிக்க முயன்றாரா? என்ற கோணத்திலும் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் கூட நிகழ்ச்சி தடைப்படவில்லை. நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வந்தது. போலீசாரின் முழு விசாரணைக்கு பிறகே அந்த இளைஞர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய அனைத்து விபரங்களும் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications