2 தோழிகளை இரவில் வீட்டில் தங்கவைத்த மாணவருக்கு ரூ.5,000 அபராதம்.. பெங்களூரில் நடந்த வினோதம்.. ரூல்ஸை பாருங்க
பெங்களூர்: பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் இரவில் 2 தோழிகளை தங்க வைத்த மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்ததை அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம் விதித்துள்ள நிலையில் கல்லூரி மாணவர் சமூக வலைதளத்தில் புலம்பி உள்ளார். இந்த பதிவு தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பெங்களூர், சென்னை, மும்பை, டெல்லி உள்பட பல முக்கிய நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இட நெருக்கடியால் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுமக்கள் தங்கி வருகின்றனர். ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புகளிலும், அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம் உள்ளது. இதற்கு என்று தனியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் தான் பெங்களூரில் இரவில் 2 தோழிகளை பிளாட்டில் தங்க வைத்ததற்காக 2 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம் ரூ.5,000 அபராதம் விதித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்த அபராதம் குறித்த பின்னணி குறித்து அவர் தனது ரெடிட் வலைதள பக்கத்தில்கூறியுள்ளதாவது:
‛‛நான் எனது நண்பருடன் பெங்களூரில் பிபரல அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து வருகிறேன். கல்லூரியில் படித்து வருகிறேன். நான் எனது 2 தோழிகளை இரவில் வீட்டில் தங்க வைத்ததால் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. இதற்கான ரசீதை வழங்கி உள்ளனர்.
நான் வசிக்கும் அடுக்குடி குடியிருப்பில் திருமணமாகாதவர்கள் இளம்பெண்களை இரவில் தங்க வைக்ககூடாது என சொல்கின்றனர். அதனை மீறியதால் அபராதம் என்று கூறியுள்ளனர். இதுபற்றி முன்பே என்னிடம் யாரும் கூறவில்லை. ஆனால் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பமாக வசிப்பவர்களுக்கு அப்படியான கட்டுப்பாடுகள் கிடையாது. நானும், அவர்களை போலவே பராமரிப்பு கட்டணம் உள்பட அனைத்தையும் செலுத்துகிறேன்.
இந்த அபராத விஷயம் சிறியது தான். ஆனால் முதல் முறை வார்னிங் செய்திருக்கலாம். இதற்காக நான் சட்ட நடவடிக்கையையுமும் எடுக்க போவது இல்லை. இருப்பினும் இதனை மறுபரிசீலனை செய்யும் வகையில் என்னால் ஏதாவது செய்ய முடியுமா? என யோசிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.5 ஆயிரம் அபராதத்துககான ரசீதை வெளியிட்டு இருந்தார். அதில்அக்டோபர் 31 ம் தேதி இரவில் 2 பெண்களை தங்க வைத்தற்கான அபராதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் இந்த பதிவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். அதில், ஒருவர், ‛‛உங்களிடம் நிறைய பணம் மற்றும் நேரம் இருக்கிறதா? நீதிமன்றம் செல்லுங்கள். இல்லாவிட்டால் இந்த இடத்தை காலி செய்து வேறு வீட்டில் தங்குங்கள்'' என்று கூறியுள்ளார். அதேபோல் இன்னொருவர், ‛‛இந்த அபராத தொகையின் பின்னணியில் எந்த அர்த்தமும் இல்லை. மாறாக இது ஒயோ ஹோட்டல் போன்று உள்ளது'' என்று கூறினார்.
-
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications