'பக்கா ஸ்கெட்ச்'.. கணவனை கொன்று காரில் வைத்து எரித்த மனைவி.. தடயமே இல்லை.. மிரண்ட போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகாவில் கள்ளக்காதலில் ஈடுபட்ட தொழிலதிபரை அவரது குடும்பத்தினரே காருடன் எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொழிலதிபரின் மனைவி மற்றும் அவரது இரண்டு மகன்களை போலீசார் கைது செய்தனர். தடயமே இல்லை, பக்கா ஸ்கெட்ச் போட்டு கொன்ற குடும்பம் கடைசியில் எப்படி மாட்டியது என்பது அதிர்ச்சி ரகமாக உள்ளது.

கர்நாடக மாநிலம் சாகர் என்ற ஊரைச் சேர்ந்தவர் வினோத். மூலிகைப்பொருள்களை தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வந்த தொழில் அதிபர் ஆவார். இவரது மனைவி வினுதா , இவர்களுக்கு விவேக், வினோத் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த செப்டம்பர் 29-ம் தேதி தீர்த்தஹள்ளி வனப்பகுதியில் கார் ஒன்று பாதி எரிந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காருக்குள் ஒருவர் சடலமாக இருப்பதை கண்டனர். அவர் யார் என்று விசாரிப்பதற்காக காரில் இருந்த நம்பர் பிளேட் மூலம் தேட முயற்சித்தனர்.

கார் பதிவு எண் தவறு

கார் பதிவு எண் தவறு

ஆனால் காரின் பதிவு எண் தவறாக இருந்துள்ளது. ஓரிஜினல் நம்பர் பிளேட் கழற்றப்பட்ட போலி பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட் மாட்டப்பட்டிருந்தது. இதனால் உயிரிழந்த நபர் யார் என்பது போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து காரின் சேஸ் நம்பரை கொண்டு அதன் உரிமையாளர் என்பதை விசாரித்தனர். அப்போது தான் அதன் உரிமையாளர் வினோத் என்பதும், அவர் தான் எரிந்த நிலையில் கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மாற்றி பேசினார்கள்

மாற்றி பேசினார்கள்

இதுகுறித்து வினோத்தின் குடும்பத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்களிடம் விசாரித்த போது வினோத் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை. ஏன் புகார் தெரிவிக்கவில்லை என்று போலீசார் கேட்ட போது வினோத்தின் மனைவி மற்றும் மகன்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். இது போலீஸுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மகன்கள் வேறு பேச்சு

மகன்கள் வேறு பேச்சு

இதையடுத்து வினோத்தின் மனைவி வினுதா மற்றும் மகன்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொழில் சம்பந்தமாக கடலோர பகுதிக்கு செல்வதாக அவர் கூறிவிட்டு சென்றதாக வினுதா கூறியிருக்கிறார். அவரது மகன்கள் வேறுவிதமாக கூறியுள்ளனர். இதனால் தான் போலீசுக்கு சந்தேகம் குடும்பத்தினர் மீது திரும்பியது. போலீஸார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி பின்னர், கணவனை குடும்பத்தினருடன் சேர்ந்து கொலை செய்ததை வினுதா ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து வினிதா மற்றும் அவரது இரண்டு மகன்களை போலீசார் கைது செய்தனர்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

இது தொடர்பாக வினுதா போலீசாரிம் அளித்த வாக்குமூலத்தில். என் கணவர் வினோத்-க்கு வேறு ஒரு பெண்ணுடன் தவறான பழக்கம் இருந்து வந்தது. இது நாளடைவில் எங்களுக்கு தெரியவந்தது. ஒரு கட்டத்தில் கண்டித்தோம். ஆனால் அவர் கேட்கவில்லை. அந்த பெண்ணும் என் கணவருடனான தொடர்பை கைவிடவில்லை.

எப்படி கொன்றார்கள்

எப்படி கொன்றார்கள்

இதனிடையே தொழிலதிபரான என் கணவரின் சொத்துக்களை அந்தப்பெண் அபகரிப்பார் என்ற அச்சம் ஏற்பட்டது. அதனால் சொத்துக்களை காப்பாற்றுவதற்காக நான், என் மகன்கள், என் கணவர் வினோத்தின் தம்பி மற்றும் உறவினர் ஒருவர் சேர்ந்து அவரை கொலை செய்ய முடிவு செய்தோம். செப்டம்பர் 26-ம் தேதி பக்கத்தில் இருந்த பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோல் வாங்கி வந்தோம். வீட்டில் வைத்து அவரை அடித்துக்கொலை செய்தோம். வீட்டில் படிந்த ரத்தக்கறையை கெமிக்கல் ஊற்றி அகற்றினோம். ரத்தம் படிந்த ஆடைகள் மற்றும் செருப்புகளை எரித்தோம். இரண்டு நாள்கள் கழித்து என் கணவர் வினோத்தின் உடலை காரில் கட்டிவைத்து இரவு 10.30 மணிக்கு எடுத்துச் சென்றோம். உள்ளூர் கடைக்காரர் மூலம் காரின் நம்பர் பிளேட்டை மாற்றினோம்.

கொலை வழக்கு

கொலை வழக்கு

காரில் வினோத்தின் சடலத்தை கொண்டு செல்லும்போது மொபைல் போனை அனைவரும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டோம். மீண்டும் வீட்டிற்கு வந்ததும் போனை மீண்டும் ஆன் செய்தோம். வினோத்தின் மொபைல் போனை தண்ணீரில் தூக்கி வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டோம் ஆனால் விசாரணையில் போலீசாரிடம் மாட்டிக்கொண்டோம்" இவ்வாறு வினுதா கூறியிருக்கிறார். இந்த வாக்குமூலத்தை அடுத்து போலீசார் , கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அனைவரையும் கைது செய்யும் பணியை தொடங்கி உள்ளனர். கள்ளக்காதலில் ஈடுபட்ட கணவனை சொத்துக்காக அவரது மனைவி அவரது இரண்டு மகன்கள் கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+