கர்நாடக பேருந்து விபத்து.. உடல் கருகி பலியான 20 பேர்! பிரதமர் மோடி இரங்கல்!
பெங்களூர்: கர்நாடகாவின் சித்ரதுர்காவில் தனியார் ஸ்லீப்பர் பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்தில் சிக்கியது. பேருந்து தீ பற்றியதில் 20 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். மட்டுமல்லாது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், "கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் நடந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 2 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்" என தெரிவித்திருக்கிறார்.
விபத்து எப்படி நடந்தது?
இன்று அதிகாலை சீ பேர்ட் நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் பேருந்து சித்ரதுர்கா அருகே சென்றுக்கொண்டிருந்தபோது, எதிரில் வந்த லாரி ஒன்று, தடுப்புகளை உடைத்துக்கொண்டு பேருந்தின் டீசல் டேங்க் மீது மோதியிருக்கிறது. இதனால் உடனே பேருந்து தீப்பற்றி எரிந்திருக்கிறது.
Deeply saddened by the loss of lives due to a mishap in the Chitradurga district of Karnataka. Condolences to those who have lost their loved ones. May those injured recover at the earliest.
— PMO India (@PMOIndia) December 25, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each…
இதனால் பேருந்தில் பயணித்த 32 பேரில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications