மகாராஷ்டிரா காயத்தை ஆற்றும் கர்நாடகா.. தேர்தல் ரிசல்ட் வர வர பாஜக செம உற்சாகம்.. பிளான் சக்சஸ்!

கர்நாடகாவில் நடந்த 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கட்சி மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள்.. இன்று வாக்கு எண்ணிக்கை

    பெங்களூர்: கர்நாடகாவில் நடந்த 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கட்சி மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அங்கு பாஜக எளிமையாக பெரும்பான்மை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி ஆட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கியதால் அங்கு மஜத - காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இதனால் அந்த 17 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். அதே சமயம் அங்கு பாஜக கட்சியும் ஆட்சி அமைத்தது.

    இந்த நிலையில் கடந்த வாரம் அந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் - மஜத - பாஜக என்று மும்முனை போட்டி நிலவியது.

    தேவை என்ன

    தேவை என்ன

    இந்த 15 தொகுதி இடைத்தேர்தல்தான் தற்போது கர்நாடகாவில் ஆட்சியை தீர்மானிக்க போகிறது. கர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 இடங்கள் உள்ளது. இங்கு பெரும்பான்மை பெற 113 இடங்கள் தேவை.தற்போது 106 இடங்களுடன் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் 15 தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு பெரும்பான்மை பெற 113 இடங்கள் தேவை.

    எத்தனை இடங்கள்

    எத்தனை இடங்கள்

    இதனால் பாஜக 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 6-7 இடங்களில் வெல்ல வேண்டும். இந்த நிலையில்தான் தற்போது பாஜக ஆரம்பத்திலேயே 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 2 இடங்களில் மஜத முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் 2 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

    அட பாஜக

    அட பாஜக

    இதனால் கர்நாடகாவில் நடந்த 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கட்சி மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. 7 தொகுதிகளில் வென்றால் போதும் என்ற நிலையில் பாஜக அங்கு 10 தொகுதிகளை வெல்லும் நிலைக்கு சென்றுள்ளது.

    பாஜக எளிமை

    பாஜக எளிமை

    அங்கு பாஜக எளிமையாக பெரும்பான்மை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மதியத்திற்குள் மொத்தமாக முன்னணி நிலவரங்கள் தெரிய வரும். ஆனால் பாஜகவினர் இப்போதே இந்த வெற்றியை கொண்டாட தொடங்கி உள்ளனர். இது அவர்கள் எதிர்பார்த்த வெற்றிதான்.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் இதைத்தான் கூறியது. மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க முடியாமல் அங்கு அவமானப்பட்டது. தற்போது அதற்கு ஆறுதல் மருந்தாக கர்நாடகாவில் பாஜக மாபெரும் வெற்றியையே நோக்கி சென்று கொண்டு இருக்கிறது .

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+