கர்நாடகாவில் கவிழும் காங்கிரஸ் அரசு? உடையும் சிவக்குமார் அரசு? 25 பேரை பிளான் போட்டு தூக்கும் பாஜக

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் இப்போது தேர்தல் நடைபெற்றால், அமைச்சர்கள் உட்பட 25 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணையத் தயாராக இருப்பதாக மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், அந்த எம்எல்ஏக்களை இப்போதே பாஜகவில் சேர்த்துக்கொள்ளுமாறு கிண்டலாக கூறியுள்ளார்.

கர்நாடகாவில் இப்போது டிகே சிவக்குமார் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக அங்கு சித்தராமையா முதல்வராக இருந்த நிலையில், அவருக்கு பதிலாக சில மாதங்களுக்கு முன்பு டிகே சிவக்குமார் முதல்வராக பதவியேற்றார். அங்கு 2028ல் தான் தேர்தல் நடக்கும் நிலையில், அதுவரை சிவக்குமார் தான் முதல்வராக இருப்பார் என தெரிகிறது.

Karnataka Congress govt at risk Karnataka Congress govt

25 எம்எல்ஏக்கள்

இதற்கிடையே கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களை பாஜக தனது பக்கம் இழுக்க முயல்வதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பான கேள்விக்கு அம்மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா பதிலளித்தார். கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவான மனநிலை உருவாகியுள்ளதாக தெரிவித்த அவர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் கட்சி மாற தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியிலிருந்து தலைவர்களை இழுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆனால், மாநில பாஜக தலைவராக ஒன்றை தெளிவாகக் கூறுகிறேன். நாளையே தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், டிகே சிவக்குமாரின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் உட்பட 25 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைவார்கள். அத்தகைய சூழல் ஏற்கெனவே உருவாகியுள்ளது" என்றார்.

பதிலடி

இதற்கிடையே விஜயேந்திராவுக்கு நக்கலடிக்கும் வகையில் டி.கே.சிவக்குமார் பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் அவர், "முதலில் அவர்களை தனது கட்சியில் சேர்த்துக்கொள்ள சொல்லுங்கள். லேட் செய்யாமல் இப்போது பாஜகவில் சேர்த்துக் கொள்ளட்டும்" என்றார்.

மாநிலங்களவை தேர்தலில் ஜேடிஎஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் சிலர் கட்சி மாறி வாக்களித்ததை சுட்டிக்காட்டிய டிகே சிவக்குமார், யார் கட்சி மாறி வாக்களித்தார்கள் என்பதை கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர்களது தலைவர்களே காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் தெரிவித்தார்.

பரபரப்பு

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பல்வேறு முயற்சிகள் நடப்பதாக டிகே சிவக்குமார் தொடர்ந்து கூறி வருகிறார். கடந்த வாரம் கூட ஸ்டிங் ஆபரேஷன் மூலம் அமைச்சர்களை சிக்கவைக்க முயற்சிகள் நடப்பதாக கூறியிருந்தார். இது தொடர்பாக தனது அமைச்சரவை சகாக்களிடம் சிவக்குமார் எச்சரித்ததாகவும் தகவல்கள் வெளியானது. தன்னையும் அமைச்சர்களையும் குறிவைக்கும் முயற்சிகளுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதும் இதற்கெல்லாம் யார் நிதியளிக்கிறார்கள் என்பதும் தனக்கு தெரியும் என்றும் சிவக்குமார் தெரிவித்திருந்தார்.

கேள்வி

இருப்பினும், இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்படவில்லை. இது குறித்து அங்குள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் எச்.டி.குமாரசாமி கேள்வி எழுப்பினார். நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக சும்மா டயலாக் விட்டு கொண்டு இருப்பதால் யாருக்கும் எந்தவொரு பலனும் இல்லை என அவர் குறிப்பிட்டார்

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் இப்போது காங்கிரஸுக்கு 140 எம்எல்ஏக்கள் உள்ளனர். எதிர்க்கட்சி வரிசையில் பாஜகவில் 63 பேரும் ஜேடிஎஸ் கட்சியில் 18 பேரும் இருக்கிறார்கள். இரு இடங்கள் இப்போது காலியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+