கர்நாடகா அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு உண்மையா? ட்விட்ஸ்ட் வைத்த காங்கிரஸ்! என்ன நடந்தது?
பெங்களூர்: கர்நாடகாவில் புதிதாக நேற்று 24 பேர் பதவியேற்று கொண்டனர். இதையடுத்து அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்ததாக தகவல் வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி தற்போது ட்விஸ்ட் வைத்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 20ம் தேதி முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பதவியேற்றனர்.

இவர்கள் 2 பேருடன் சேர்ந்து 8 பேர் அமைச்சர்களாக பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். இவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. இதற்கிடையே தான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து புதிதாக அமைச்சராகும் 24 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. இவர்கள் 24 பேரும் நேற்று பெங்களூர் ஆளுநர் மாளிகையில் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
இதன்மூலம் கர்நாடகா அமைச்சரவை முழுமையாக நிரம்பி உள்ளது. கர்நாடகா அமைச்சரவையில் முதல்வரோடு சேர்த்து மொத்தம் 34 பேர் அங்கம் வகிக்க முடியும். அதன்படி தற்போது கர்நாடகா அமைச்சரவை முழுமையாக நிரம்பி உள்ளது. அதன்படி கர்நாடகா அமைச்சர்களாக பொறுப்பேற்ற முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வரா, முனியப்பா, கே.ஜி.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜார்கோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் உள்ளிட்டவர்கள் உள்ளனர்.
அதேபால் இன்று புதிய அமைச்சர்களாக எச்கே பாட்டீல், கிருஷ்ணபைரே கவுடா, செலுவராயசாமி கே வெங்கடேஷ், எச்சி மகாதேவப்பா, ஈஷ்வர் கண்ட்ரே, கியாத்தசந்திரா என் ராஜண்ணா, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், சரணபசப்பா தர்சனாபூர், சிவானந்தா பாட்டீல், திம்மாப்பூர் ராமப்பா பாலப்பா, எஸ்எஸ் மல்லிகார்ஜூன், தங்கடகி சிவராஜ் சங்கப்பா, சரணபிரகஷ் ருத்ரப்பா பாட்டீல், மான்கால் வைத்யா, லட்சுமி ஹெப்பால்கள், ரகீம் கான், டி சுதாகர், சந்தேஷ் லாட், போஸ்ராஜூ, பிஎஸ் சுரேஷ், மது எம்சி சுதாகர், நாகேந்திரா, மது பங்காரப்பா உள்ளிட்டவர்கள் பதவியேற்றனர்.
இந்நிலையில் தான் நேற்று அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக இணையதளங்களில் பட்டியல் ஒன்று வெளியானது. சில செய்தி நிறுவனங்களும் இதனை செய்தியாக வெளியிட்டன. அதன்படி சித்தராமையா வசம் நிதித்துறை, டிகே சிவக்குமார் வசம் பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத்துறை, பெங்களூர் நகர மேம்பாட்டு துறை வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்ட்டு இருந்தது. மேலும் பரமேஸ்வரிடருக்கு உள்துறை, கேஜே ஜார்சுக்கு மின்சாரத்துறை, ராமலிங்க ரெட்டிக்கு போக்குவரத்து துறை, தினேஷ் குண்டுராவுக்கு சுகாதாரத்துறை, மது பங்காரப்பாவுக்கு பள்ளி கல்வித்துறை, கேஎச் முனியப்பாவுக்கு உணவுத்துறை, ஜமீர் அகமது கானுக்கு வீட்டு வசதி மற்றும் ஹஜ் துறை என அனைவருக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தான் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை கர்நாடா காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுபற்றி கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‛‛ சமூக வலைதளங்களிலும் சில செய்தி நிறுவனங்களிலும் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக போலியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை இதனால் இந்த யுகங்களுக்கு யாரும் செவிசாய்க்க வேண்டாம். அதோடு போலி செய்தியை நம்பவும் வேண்டாம். அரசு சார்பில் விரைவில் அதிகாரப்பூர்வமாக துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
கொட்டும் மழைக்கு நடுவே.. பெங்களூரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்.. குவிந்த தமிழ் இளைஞர்கள்! -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications