பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாவர்க்கர் போஸ்டர் சர்ச்சை... இளைஞரை கத்தியால் குத்திய 4 பேர்.. சுட்டு பிடித்த கர்நாடக போலீஸ்

Google Oneindia Tamil News

பெங்களூர்: ர்நாடகாவில் சாவர்க்கரின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது தொடர்பான சர்ச்சையில் இளைஞரை கத்தியால் குத்திய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Recommended Video

    கலவர பூமியான கர்நாடகா! பாஜக நிர்வாகி கொலையால் பதற்றம்..

    இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஒருபுறம் கொண்டாட்டங்கள் இருந்தாலும், மறுபுறம் கர்நாடகாவில் சில இடங்களில் சர்ச்சைகளும், அசம்பாவிதச் சம்பவங்களும் நிகழ்ந்தன.

     Karnataka Police Arrested 4 People For Stabbing Man Over Savarkar Poster Issue

    முன்னதாக, சுதந்திர தினத்தன்று கர்நாடகா அரசு சார்பில் பத்திரிகைகளுக்கு விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன. அதில் சுதந்திரப் போராட்ட வீரர்களான மகாத்மா காந்தி, வல்லபபாய் படேல், அம்பேத்கர், பகத் சிங் உள்ளிட்டோரின் படங்களுடன் ஆர்எஸ்எஸ் நிறுவனரான சாவர்க்கரின் படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால், அதில் சுதந்திரப் போராட்ட வீரரும், நாட்டின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் படம் இடம்பெறவில்லை. இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்த விளம்பரத்தில் சாவர்க்கரின் படம் இடம்பெற்றதற்கும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.

    "பிரிட்டாஷாரிடம் மன்னிப்புக் கடிதங்கள் கொடுத்த சாவர்க்கரின் படத்தை போட்டுவிட்டு, சுதந்திரப் போராட்டத்துக்காக பல ஆண்டுகள் சிறையில் இருந்த நேருவின் படத்தை எப்படி புறக்கணிக்கலாம்?" எனவும் அக்கட்சியின் தலைவர்கள் கேள்வியெழுப்பி இருந்தனர்.

    சாவர்க்கர் போஸ்டரும்... கத்திக்குத்தும்...

    இந்த நிலையில், கர்நாடகாவின் பல இடங்களில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நேற்று சாவர்க்கர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த போஸ்டர்களை அகற்றக் கோரி ஒருதரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதே சமயத்தில், பெங்களூரு, மைசூரு ஆகிய நகரங்களில் காங்கிரஸ் சார்பில் ஒட்டப்பட்டிருந்த சுதந்திரப் போராட்ட வீரர் திப்பு சுல்தானின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. இதையடுத்து, அங்கு இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதேபோல, மங்களூரு, ஷிவ்மொக்கா ஆகிய இடங்களில் சாவர்க்கரின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் ஷிவமொக்காவில் பிரேம் சிங் என்ற இளைஞரை சிலர் கத்தியால் குத்தினர். இதில் அவர் படுகாயமடைந்தார். பிரேம் சிங்கை குத்திய நபர்களை கைது செய்யக் கோரி இந்து அமைப்புகள் பேரணி நடத்தின. இதனால் அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக மங்களூரு, ஷிவமொக்கா ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

    கைது

    இந்நிலையில், பிரேம் சிங்கை கத்தியால் குத்தியதாக 4 பேரை போலீஸார் இன்று காலை கைது செய்தனர். அவர்களில் நடீம் (25), அப்துல் ரஹ்மான் (25), ஜபிபுல்லா (27) ஆகிய 3 பேரின் பெயர்களை மட்டுமே போலீஸார் வெளியிட்டனர். ஒருவரின் பெயரை வெளியிடவில்லை. இவர்களில் ஜபிபுல்லா தப்பிச் செல்ல முயன்ற போது அவரது காலில் துப்பாக்கியால் சுட்டு போலீஸார் கைது செய்தனர்.

    English summary
    Karnataka Police Arrested 4 People For Stabbing Man Over Savarkar Poster Issue In Shivamogga
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X