பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடகாவில் கைதான ‘லோக்கல்’ நித்யானந்தா! களி திண்ண வைத்த போலீஸ்! பஞ்சாயத்து செய்யும் லிங்காயத்து?

Google Oneindia Tamil News

பெங்களூரு : லிங்காயத்து மடத்தின் மடாதிபதி ஒருவரை அம்மாநில போலீசார் சிறு குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்துள்ள நிலையில், விசாரணை நியாயமாக நடக்காது என பாதிக்கப்பட்டவர்கள் கூறி வருகின்றனர்.

கடத்தல் பாலியல் வன்கொடுமை பண மோசடி உள்ளிட்ட பல வழக்குகளில் சிக்கி தலைமறைவாகி இருக்கும் நித்தியானந்தாவுக்கு கர்நாடக மாநிலத்தில் ஆசிரமம் ஒன்று உள்ளது. கர்நாடகா என்றாலே பொதுவாக ஆசிரமங்களுக்கு பெயர் போனது.

அங்கு மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட பல்வேறு மடங்களின் ஆசிரமங்கள் உள்ளன. இந்த நிலையில் தான் நித்தியானந்தா மீது அங்கிருந்த சீடர்கள் பாலியல் புகார் அளித்தனர். இது போலவே அங்கே இருக்கும் மற்றொரு சாமியார் ஒருவர் பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கி உள்ளார்.

கர்நாடகா மடாதிபதி மீது பாய்ந்த போக்சோ.. ”கருத்து கூறுவது சரியல்ல” முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டி! கர்நாடகா மடாதிபதி மீது பாய்ந்த போக்சோ.. ”கருத்து கூறுவது சரியல்ல” முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டி!

 கர்நாடகா நித்யானந்தா

கர்நாடகா நித்யானந்தா

தற்போது அவர் அம்மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அம்மாநிலத்தில் பதட்டம் நிலவும் நிலையில் தற்போது அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்ட போதுதான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கர்நாடக மாநில அரசியலில் தலைவிதியை நிர்ணயிக்கும் லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த ஒரு மடத்தின் அதிபதி தான் தற்போது சிறு குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

சிவமூர்த்தி முருக சரணரு

சிவமூர்த்தி முருக சரணரு

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இங்கிருந்து லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த ஜகத்குரு முருக ராஜேந்திர வித்ய பீடம் மடத்தின் மடாதிபதியாக இருக்கும் சிவமூர்த்தி முருக சரணரு தான் இந்த பகிர் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கும் சாமியார். அவரது மடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளியில் படித்து வந்த இரண்டு குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் விடுதியில் தங்கி படித்து வந்த அந்த சிறுமிகளை கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சாமியார் முருக சரணரு பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

பாலியல் புகார்

பாலியல் புகார்

இதையடுத்து கர்நாடகாவில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் குழந்தைகளின் பெற்றோர் புகார் அளித்த நிலையில் இந்த விவகாரம் வெளி உலகிற்கு வெளிச்சத்திற்கு வந்தது, கர்நாடக அரசியல் பொறுத்த வரை லிங்காயத்து மடம் ஆதிக்கம் செலுத்தும் ஒன்று என்பதால் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கடும் கொந்தளிப்பு உருவான நிலையில் மக்களே களத்தில் இறங்கி போராடி தொடங்கினர். இதையத்து கடந்த வாரம் சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தப்பிச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அதிரடி கைது

அதிரடி கைது

இதை எடுத்து அவரை தடுத்து நிறுத்திய போலீசார் மாநிலத்தை விட்டு எங்கும் செல்லக்கூடாது எனவும் இல்லையேல் கைது செய்வோம் என எச்சரித்தனர். மேலும் விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸும்ன் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர் கைது செய்யப்படாத நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் போராட்டத்தில் இறங்கப்போவதாக வந்த தகவலையடுத்து தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சாமியார் சிவமூர்த்தி உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பெற்றோர் சந்தேகம்

பெற்றோர் சந்தேகம்

நேற்று இரவு தான் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் காலையில் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் அவரது வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளதாக கர்நாடக மாநில போலீசார் கூறியுள்ளனர். இந்த நிலையில் தான் கர்நாடகாவில் பெரும்பான்மை சமூகமான லிங்காயத்து மடாதிபதி என்பதாலும். அவர் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோருக்கு நெருக்கமான சாமியார் என்பதாலும் இந்த வழக்கு விசாரணை நியாயமாக நடைபெறாது எனவும் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் கூறியுள்ளனர்.

English summary
A Lingayat Math abbot has been arrested and remanded in judicial custody by the state police on the basis of a complaint of sexual harassment of minors, the victims are saying that the trial will not be conducted fairly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X