ஆபாசப் படங்கள் மூலம்.. 40+ பேரை ஸ்லீப்பர் செல்களாக மாற்றிய மங்களூர் தீவிரவாதி? "ஷாக்" தகவல்
பெங்களூர்: மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்து என்ஐஏ கட்டுப்பாட்டில் இருக்கும் முகமது ஷாரிக், ஆபாசப் படங்கள் மூலமாக 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களை மயக்கி, பின்னர் அவர்களை மூளைச் சலவை செய்து ஸ்லீப்பர் செல்களாக மாற்றியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
மேலும், அந்த ஸ்லீப்பர் செல்களுக்கு பயங்கரவாத பயிற்சிகளும் வழங்கப்பட்டிருப்பதால் அவர்கள் எந்நேரமும் ஆபத்தானவர்களாக மாறுவார்கள் என என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, அடையாளம் தெரியாமல் இருக்கும் அந்த ஸ்லீப்பர் செல்களை தேடும் நடவடிக்கையில் என்ஐஏ அமைப்பும், கர்நாடகா போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்தடுத்து அதிர்ச்சி
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்புக்கான காரணமான முகமது ஷாரிக் (27) படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அவரது செல்போனை என்ஐஏ அதிகாரிகள் ஆராய்ந்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. முகமது ஷாரிக் தனது உண்மையான பெயரை மறைத்து வேறு பெயருடன் கோவை, மதுரை, கேரளாவின் கோழிக்கோடு, கர்நாடகாவின் மங்களூர், உடுப்பி உள்ளிட்ட இடங்களை சுற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி
இதனால் அந்த இடங்களில் அவர் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இதன் தொடர்ச்சியாக, முகமது ஷாரிக் பயணித்த இடங்களுக்கு போலீஸாரும், என்ஐஏ அதிகாரிகளும் சென்று ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, முகமது ஷாரிக் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகளுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதாவது, அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெடிகுண்டுகளை தயாரிக்க ஷாரிக் திட்டமிட்டதும், அதற்காக டிப்ளமோ படித்த அவர், பின்னர் மைசூரில் உள்ள ஒரு செல்போன் பழுதுபார்க்கும் கடையில் வேலைக்கு சேர்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆபாசப் படங்கள் மூலம் 'டார்கெட்'
அந்த சமயத்தில், 10 செல்போன்களை வாங்கிய முகமது ஷாரிக், அவரிடத்தில் பழுதுபார்ப்பதற்காக வந்த செல்போன்களில் உள்ள ஆபாச வீடியோக்கள், அந்தரங்க வீடியோக்களை முகமது ஷாரிக் தனது செல்போன்களில் பதிவிறக்கம் செய்திருக்கிறார். மேலும், பல செல்போன்களில் உள்ள தொடர்பு எண்களை எடுத்துக்கொண்ட முகமது ஷாரிக், தன்னிடம் உள்ள ஆபாச வீடியோக்களை அவர்களுக்கு அனுப்பியுள்ளார். அப்போது இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்ற குறுஞ்செய்தி ஒன்றையும் அவர் அனுப்புவாராம். இதற்கு பதிலளிக்கும் இளைஞர்கள்தான் முகமது ஷாரிக்கின் டார்கெட் ஆக மாறியுள்ளனர். இவ்வாறு ஆபாசப் படங்களை பார்த்து தனது வலையில் விழும் இளைஞர்களை கொஞ்சம் கொஞ்சமாக தீவிரவாத விஷயங்களை நோக்கி இழுத்திருக்கிறார் முகமது ஷாரிக்.

40-க்கும் மேற்பட்ட ஸ்லீப்பர் செல்கள்
பின்னர், பல தீவிரவாதம் தொடர்பான வீடியோக்களை அனுப்பி அவர்களை மூளைச் சலவை செய்து தனது அமைப்பில் அவர்களை சேர்த்து நாசவேலையில் ஈடுபட பயிற்சியும் வழங்கியதாக கூறப்படுகிறது. இதுபோல, கர்நாடகா கடலோர மாவட்டங்களில் மட்டும் 40 இளைஞர்களுக்கு முகமது ஷாரிக் பயங்கரவாத பயிற்சி வழங்கியுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வெடிகுண்டுகளை தயாரிப்பது, அவற்றை கையாள்வது, வெடிகுண்டுகளை வைத்துவிட்டு தப்புவது போன்ற பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. தற்போது அந்த இளைஞர்கள் கர்நாடகா கடலோர மாவட்டங்களில் ஸ்லீப்பர் செல்களாக மக்களுடன் மக்களாக கலந்து இருக்கிறார்கள். அவர்கள் எந்நேரமும் ஆபத்தானவர்களாக மாறலாம் என்பதால் அவர்களை தேடும் பணியில் என்ஐஏ அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications