ஸ்விக்கி, சோமாட்டோவுக்கே போட்டி! களத்தில் இறங்கிய தபால் துறை! என்னல்லாம் டெலிவரி செய்யுறாங்க பாருங்க
பெங்களூரு: இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் இட்லி, தோசை மாவுகளை வீட்டுக்கே நேரடியாக சென்று டெலிவரி செய்யும் திட்டத்தை இந்திய தபால்துறை தொடங்கியுள்ளது.
தற்போது உள்ள வாட்ஸ்-அப், டுவிட்டர், பேஸ்-புக் போன்ற தகவல் தொலைத்தொடர்புத்துறை இந்திய சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தும் முன்பாக தபால் துறை தான் இந்தியாவில் கோலோச்சி இருந்தது. அப்போதைய சூழலில் மக்கள் தங்கள் தகவல்களை மற்றவர்களுக்கு கடிதம் மூலம் கையால் எழுதி தெரிவித்து வந்தனர். இந்த சேவையில் தபால் துறை முக்கிய பங்காற்றியது.
ஆனால், இன்றைய ஸ்மார்ட் உலகில் அந்த பழக்கம் எல்லாம் வழக்கொழிந்து விட்டது. அரசு தொடர்பான கடிதங்கள் போன்ற சில சேவைகளுக்காக மட்டுமே இன்னமும் தபால் துறையின் மூலம் கடிதப்போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இட்லி, தோசை மாவு
இந்த மாற்றத்தினை சமாளிக்க தபால் துறையும் தற்போது நவீன உலகத்துக்கு ஏற்றாற்போல், தனது சேவையை பல்வேறு தளங்களில் விரிவுபடுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், பெங்களூருவில் தபால் துறை மேற்கொண்டுள்ள புதிய திட்டம் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது. அதாவது, இட்லி மற்றும் தோசை மாவுகளை வீடுகளுக்கே சென்று நேரடியாக டெலிவரி செய்யும் திட்டத்தை பெங்களூரு பிராந்திய தபால் துறை மேற்கொண்டுள்ளது. சோதனை அடிப்படையில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக சொல்லும் பெங்களூரு தபால் துறை, கடந்த திங்கட்கிழை முதல் டெலிவரி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சோதனை அடிப்படையில்...
இது குறித்து இந்திய தபால் துறையின் கர்நாடக பிரிவு தலைமை பொது போஸ்ட் மாஸ்டர் எஸ். ராஜேந்திர குமார் கூறுகையில், ''பெங்களூருவில் மிகவும் பிரபலமாக உள்ள ஹல்லிமனே குழுமத்திடம் இட்லி, தோசை மாவுகளை பெற்று சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் நாளான திங்கட்கிழமை, மாவு உள்பட உடனடியாக உணவு பொருட்கள் தயாரிக்கும் வகையிலான இன்ஸ்டண்ட் மிக்ஸர்கள் ஆர்டர் வந்தது.
இதற்கான டெலிவரி அதே நாளில் செய்து கொடுத்தோம். தற்போது சிறிய அளவில்தான் தொடங்கியிருக்கிறோம். மக்களின் வரவேற்பை பொறுத்து பெரிய அளவில் விரிவுபடுத்தி உணவுப்பொருட்கள் தொழிலில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களுடன் கைகோர்த்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.

மக்களின் ஆதரவை பொறுத்து
தபால் துறையில் புதிய தொழில் வாய்ப்பாக இது மாறவும் செய்யலாம். தற்போது தபால்களை டெலிவரி செய்யும் ஊழியர்களே இதில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இட்லி, தோசை மாவுகளை வீட்டுக்கே டெலிவரி செய்யும் இந்த புதிய திட்டத்திற்கு மக்கள் அளிக்கும் வரவேற்பை பொறுத்து உணவு தயாரிக்கும் பொருட்கள் விற்பனை செய்வதற்கென்றே தனியாக ஊழியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

இந்தியா முழுவதும் விநியோகம்
தற்போது உணவுப்பொருட்களை நேரடியாக வீட்டிற்கே விநியோகம் செய்யும் சோமட்டா, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக இதை செய்யவில்லை. தபால் துறை மூலம் உணவுப்பொருட்கள் நேரடியாக விற்பனை செய்யப்படாது. உணவு பண்டங்கள் தயாரிக்க தேவையான மாவு போன்ற பொருட்களை மட்டுமே டெலிவரி செய்ய உள்ளோம்.
2-3 நாட்கள் வரை கெட்டுப்போகாத அளவுக்கு இட்லி, தோசை மாவு போன்றவற்றை தயாரிக்க நிறுவனங்கள் முன் வந்தால் கர்நாடகா மட்டும் அல்லாது பிற மாநிலங்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிப்போம்" என்றார்.

கால அவகாசம் வேண்டும்
இட்லி, தோசை மாவு ஆகியவற்றை தவிர்த்து உடனடியாக உணவுப்பண்டங்கள் செய்யக்கூடிய இன்ஸ்டண்ட் மிக்ஸ் பொருட்களான சட்னி பவுடர், கேசரிமிக்ஸ் உள்ளிட்ட பொருட்களும் இதுவரை விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக தபால்துறையின் வர்த்தக மேம்பாட்டு துறை அதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து ஹல்லிமனே குழுமத்தினரிடம் கேட்ட போது, அதற்கு கால அவகாசம் வேண்டும் என தெரிவித்து விட்டனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications